இன்று கூகுளில் தெரிவது ஹலோவீன் : ஆவிகள் வாழும் வீடுகள்
- Wednesday, 31 October 2012 06:02

இன்று கொண்டாடப்படும் ஹலோவீன் தினத்தை முன்னிட்டு கூகுள் தனது ஹோம்பேச்சில் சாலையோர வரிசை வீடுகளில் ஆவிகள் உள்ளது போல் வடிவமைத்துள்ளது.
இவ்வீடுகளின் ஒவ்வொரு கதவையும் கிளிக் செய்வதன் மூலம் உள்ளே ஒவ்வொரு வெவ்வேறு உருவங்களில் google எழுத்துக்கள் தோன்றி நமக்கு அதிர்ச்சி அளிப்பதைக் காணலாம்.
இப் பண்டிகையை மேற்குலக நாடுகளில் சின்னஞ் சிறார்கள் முதல் பெரியோர் வரை அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடுவர். ஆவிகள் போல் முகமூடிகளையும், ஆடைகளையும் அணிந்து கொள்ளல், பூசணிக்காய் உள்ளிட்ட காய்கறிகளில் உருவங்களை செதுக்குதல் என தற்போது வணிக ரீதியாக மிகபிரபலமான திருவிழாவாகவும், ஆவிகளுக்கென கொண்டாடப்படுவதாக மாறியுள்ளது இந்த ஹலோவீன்.

அதோடு ஆவிகள் போல் சிறார்கள் உடை அணிந்து வீடுகளில் பரிசுகள் பெறுவது போன்றவை இந்நாட்களில் விஷேசம். இம்மாத தொடக்கத்திலிருந்தே களைகட்டிய ஹலோவீன் பண்டிகை அமெரிக்காவில் நேற்று தாக்கிய சாண்டி புயலால் அந்நாட்டு கடலோர பகுதி மக்களின் கொண்டாட்டங்கள் தடைப்பட்டது சோகமே. இருப்பினும் பிற நாடுகளில் ஹலோவீன் பண்டிகை கொண்டாட்டம் உற்சாகம் பெற்றுள்ளது.

இவற்றையும் காண்க:
- ஹலோவீன் பயமுறுத்தும் புகைப்படங்கள்
- இன்று கூகுளில் தெரிவது ஹெர்மன் மெல்விலின் மொபி-டிக் நாவல்
- இன்று கூகுளில் தெரிவது நீல்ஸ் போரின் அணுக் கட்டமைப்பு
- கூகுள் ஹோம்பேச்சை அலங்கரிக்கும் கூகுளின் பிறந்த நாள்
- இன்று கூகுள் டூடிளை அலங்கரிப்பது Star Trek கதாபாத்திரங்கள்
- இன்று கூகுளில் தெரிவது அமெரிக்காவின் நீண்ட நாள் மர்மங்களில் ஒன்றை பற்றியது
