கட்டுரைகள்
Typography

எதிர்மறை திணிவு, மிகை சக்தி துணிக்கைகள் போன்ற பௌதிகவியல் கூறுகளும் ஐன்ஸ்டீனின் பொதுச் சார்புக் கொள்கைக் கட்டமைப்பும் டைம் டிராவல் மூலம் கடந்த காலத்துக்கு மட்டும் செல்வது சாத்தியம் என்பதை ஊகிக்க செய்துள்ளதாக பௌதிகவியல் நிபுணர்கள் அண்மையில் தெரிவித்துள்ளனர்.

அதாவது பிரபஞ்சத்தில் டைம் டிராவல் செய்யக் கூடிய வாசலாகக் கருதப்படும் விஞ்ஞானப் புனைவு துவாரமான Worm hole இனது ஒரு அந்தம் நிலையாகவும் மற்றைய அந்தம் ஒளியின் வேகத்தில் இயக்கதிலும் இருக்குமாறு குறித்த துணிக்கைகள் வழிநடத்தக் கூடியதாம். இதன்மூலம் தத்துவவியல் பௌதிகத்தில் (Theoretical physics) மனிதன் இந்த வோர்ம் ஹோல் மூலம் கடந்த காலத்துக் பாய முடியும் என்பதற்கு சாத்தியம் உள்ளதாம்.

கடந்த காலத்தில் விஞ்ஞானப் புனைவுகளாகவே இருந்து வந்த சுயமாக ஓடும் கார், மனிதனைப் போன்ற ரோபோ ஆகியவை நிகழ்காலத்தில் சாத்தியமாகி இருக்க ஏன் வருங்காலத்தில் டைம் டிராவலும் சாத்தியமாக முடியாது என விஞ்ஞானிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். பௌதிகவியல் கொள்கைகளில் முன்பு மும்மொழியப் பட்ட பல துணிக்கைகள் CERN போன்ற மிக நுணுக்கமான மோதுகைக் கருவிகள் மூலம் நிரூபிக்கப் பட்டு வருகையில் பிரபஞ்சத்தின் சில கூறுகளை விளக்கும் துணிக்கைகளில் பூச்சிய நிறையுடய துணிக்கைகள் மற்றும் எதிர்மறை திணிவுடைய துணிக்கைகள் என்பன கருதுகோள்களாகவே உள்ளன. ஆனால் அதிநிறை கரும் துளை, வோர்ம் ஹோல் மற்றும் டைம் டிராவல் போன்ற விடயங்களை விளக்க பாஸிட்டிவ் சக்தி, பூச்சிய நிறை கொண்ட துணிக்கைகள் மற்றும் நெகட்டிவ் எனெர்ஜி, எதிர்மறை திணிவு கொண்ட துணிக்கைகள் போன்ற கொள்கைகள் அவசியப் படுகின்றன.

இந்நிலையில் தான் தற்போது வருங்காலத்துக்கு செல்ல இயலாவிட்டாலும் கடந்த காலத்துக்கு அதாவது கால ஓட்டத்தில் பின்னோக்கி செல்வது மாத்திரம் சாத்தியம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

- 4 தமிழ்மீடியாவுக்காக நவன்

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்