கட்டுரைகள்
Typography

 

இதுவரை எமது பிரபஞ்சத்தின் அடிப்படைக் கூறுகளான காலமும் வெளியும் பிக் பேங் என்ற பெருவெடிப்பு சம்பவத்தின் பின் தான் தோன்றின என்றே கருதப்பட்டு வந்தது.

ஆனால் இந்த பிக் பேங் என்பது முன்பிருந்த ஓர் பழைய பிரபஞ்சத்துடன் தொடர்பு உடையது என்றும் அதனுடான இணைப்பை (contraction) முறிக்காது அதே நேரம் ஒரு துள்ளல் (Big Bounce) முறையாகத் தான் காலத்தையும் வெளியையும் அதன் பின்னர் அணுக்களையும் மூலக்கூறுகளையும் வெளிப்படுத்தியது எனப் பௌதிகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது பிக் பேங் என்பது நடக்கவே இல்லை என்றும் பதிலாக பிக் பௌன்ஸ் தான் நடைபெற்றது என்றும் கொள்ள முடியும் எனவும் இவர்கள் கூறுகின்றனர்.

எமது பிரபஞ்சத்தில் சீரான விதத்தில் (Regular) இயங்கும் கருந்துளைகளின் நடத்தையை அவதானிக்கும் போது தான் இந்த பிக் பௌன்ஸ் கொள்கை உருப் பெற்றதாக வானியலாளர்கள் விளக்குகின்றனர். இதே கொள்கையுடன் பிக் கிரஞ்ச் (Big Crunch) என்ற பிரபஞ்சத்தின் முடிவுக் கொள்கையையும் சேர்த்து அவதானிக்கும் போது பிரபஞ்சத்தின் ஆரம்பமும் அதன் முடிவும் வன்முறையான விதத்தில் (பிரளயம்) நிகழ்வதாகக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் பதிலுக்கு அவை பழைய பிரபஞ்சத்துடனான இணைப்பு மற்றும் அதில் உள்ள சூத்திரங்களுக்கு அமைவான ஒரு குவாண்டம் நிலைமாற்றமாக இருக்கும் என்றும் விளக்கப் படுகின்றது.

இதில் முக்கியமான இன்னொரு விடயம் பிக் பேங் கொள்கை மூலம் கூறப்படும் கால வெளி ஒருங்கிணைப்பு (Space time singularity) என்ற கருதுகோளுக்கு அவசியம் இல்லாமல் போவது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பிக் பேங் மாடல் மூலம் பிரபஞ்சத்தின் கூறுகளான கருந்துளை, சூப்பர் நோவா மற்றும் குவாசர்கள் போன்றவற்றின் செயற்பாட்டை அறிந்து கொள்வதில் ஏற்படும் இடையூறும் தவிர்க்கப் படுகின்றது. பிக் பௌன்ஸ் கொள்கையும் தற்போது கருதுகோள் அளவிலேயே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி, தகவல் : Mail Online

- 4தமிழ்மீடியாவுக்காக நவன்

BLOG COMMENTS POWERED BY DISQUS