கட்டுரைகள்
Typography

எமது பூமியில் நிலத்தை விட கடல்களிலும் சமுத்திரங்களுக்கு அடியிலும் தான் அதிக உயிரினங்கள் வாழ்கின்றன. பூமியின் மேற்பரப்பில் 70% வீதத்தைக் கொண்டுள்ள சமுத்திரங்களில் வாழும் உயிரினங்கள் குறித்து மனித இனம் சொற்ப அளவில் தான் அறிந்து வைத்துள்ளது என கடல் உயிர் வாழ் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடலுக்கு அடியில் 0.3 மில்லியன் முதல் 100 மில்லியன் வரை உயிரின வகைகள் வரை வாழ வாய்ப்புள்ளதாம். மனித இனம் இவற்றில் 275 000 உயிரினங்களை மாத்திரம் இதுவரை அறிந்துள்ளது என்றும் இவை அனைத்தும் பெயரிடப் பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது. மனிதனின் செயற்பாடுகளால் சமுத்திரங்களும் அவற்றின் உயிர் வாழ்க்கையும் பாதிக்காது இருக்க கடல் வாழ் உயிரினங்கள் அவற்றின் வாழ்க்கை முறை பற்றி மனிதன் நன்கு அறிந்திருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

கடல் வாழ் உயிரினங்கள் பற்றிய இந்தத் தகவல் பிபிசி இனது அண்மைய Blue planet II என்ற ஆவணப் படத்தில் செர் டேவிட் அட்டென்பொரொஹ் என்ற ஆய்வாளரால் தெரிவிக்கப் பட்டுள்ளது.  சமுத்திரங்களது அடியில் வசிக்கும் அனைத்து உயிரினங்களையும் வகைப் படுத்துவது மிகவும் கடினமானது என்றும் தெரிவித்த டேவிட் ஆனாலும் ஒவ்வொரு வருடம் இந்த உயிரினப் பட்டியலில் எமது சிந்தனைக்கு அப்பாற்பட்ட விசித்திர உயிரினங்கள் அடங்கலாக கிட்டத்தட்ட 2000 உயிரினங்கள் வரை சேர்க்கப் பட்டே வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த விசித்திர உயிரினங்களில் மனிதனின் செயற்பாடு காரணமாக ஏற்பட்டு வரும் சுற்றுச் சூழல் மற்றும் கடல் மாசு காரணமாக 20% வீதமானவை இன அழிவை எதிர்நோக்கியுள்ளன என்பதும் அதிர்ச்சியூட்டக் கூடிய தகவலாகும்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்