கட்டுரைகள்

இன்று டிசம்பர் 22 ஆம் திகதி தேசிய கணித தினம் என்பது மட்டுமல்லாது இந்தியாவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற கணிதவியலாளரும் தமிழருமான சிறிநிவாச ராமனுஜரின் பிறந்த தினமும் ஆகும்.

இணையற்ற கணித மேதையான இராமனுஜர் தொடர்பான முக்கிய தகவல்களைப் பார்ப்போம். தென்னிந்தியாவின் நாமக்கல்லில் தமிழ் ஐயங்கார் குடும்பத்தில் பிறந்த ராமானுஜர் சிறுவயது முதற்கொண்டே கணிதத்தில் அபார திறமையுடன் நல்ல பக்திமானாகவும் விளங்கினார். இவரது திறமையை அடையாளம் கண்டு இலண்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் இவர் பயில வாய்ப்பு அளித்தது மட்டுமல்லாது பின்னாளில் கணிதத் துறைக்கு இவரின் இணையற்ற பங்களிப்புக் காரணமாக ரோயல் சமூகத்தில் சேரவும் உதவி புரிந்தவர் எச் டி ஹார்டி என்ற பிரிட்டிஷ் கணித அறிஞர்.

ராமானுஜரின் பங்களிப்பு தூய கணிதத்தில் கணித மீளாய்வு, நம்பர் தியரி, முடிவிலி தொடர்கள் மற்றும் தொடர் பின்னம் போன்றவற்றில் முக்கியமானதாகும். கணித அடையாளங்கள் மற்றும் சமன்பாடுகள் அடங்கலாக இவர் 3900 கணித வரைவுகள் வரை அளித்துள்ளார். இன்றைய தேதியில் கிட்டத்தட்ட இவரின் அனைத்து அடையாளங்களும் நிரூபிக்கப் பட்டு விட்டன.

மிகவும் இளவயதிலேயே திருமணம் செய்து கொண்ட ராமானுஜர் 1920 ஆம் ஆண்டு தனது 32 ஆவது வயதில் காச நோய் காரணமாகக் காலமானார்.