புகைப்படம்

சர்வதேச பூமி தினமான இன்றைய நாளை உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் கொண்டாடிவருகின்றனர். இந்நிலையில் முன்னணி ஆன்லைன் பயண ஆலோசகர் ஒருவர் உலகின் மிகச்சிறந்த அல்லது வசீகரமான 10 வனங்களை தொகுத்து வெளியீட்டுள்ளார். இதோ அவைதான் இவை :

1.Crooked வனம், போலந்து


போலந்து நாட்டில் இருக்கும் Crooked வனத்தில், (வளைந்த காடு) சுமார் 400 பைன் எனும் வளைந்த மரங்கள் உள்ளன. இவ்வாறான வடிவம் மனிதனால் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் எவ்வாறு, எதற்காக என்பது தெரியவில்லையாம்.

2.Sagano மூங்கில் வனம், ஜப்பான்

ஜப்பானில் அமைந்திருக்கும் Sagano எனும் மூங்கில் வனம் 16 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை கொண்டது. இந்தப் தோப்பின் வழியாக வீசும் காற்றினால் எழுப்படும் ஒலி பாதுகாக்கப்படுகிறதாம்.

3.Black காடு, ஜெர்மனி


ஜெர்மனியின் தென்மேற்கு பகுதியில் Baden-Württemberg எனும் இடத்தில் அமைந்துள்ளது. இக் காடு மிகுந்த அடர்த்தியாக இருப்பதனால் வெளிச்சம் வருவது குறைவாக உள்ளதால் இந்தப் பெயராம்.

4.Zhangjiajie தேசிய வனம் சீனா

Zhangjiajie எனும் இந்த தேசிய பூங்கா சீனாவின் ஹுனான் மாகாணத்தில் அமைந்துள்ளது. Wulingyuan எனும் இடத்தில் அமைந்திருக்கும் கண்ணுக்கினிய பூங்காக்களில் இப்பூங்காவும் ஒன்று. இப்பூங்கா முழுவதும் உள்ள கம்பீரமான தூண் போன்ற பாறை அமைப்புக்கள் பிரபலமானது.

5. Inyo தேசிய வனம் அமெரிக்காஅமெரிக்காவில் அமைந்திருக்கும் இந்த தேசிய வனம் கலிபோர்னியா வெள்ளை மலைகள் மற்றும் நெவாடா என்ற மலைகள் மற்றும் கலிபோர்னியா கிழக்கு சியரா நெவாடா பகுதிகள் உட்பட 1.903.381 ஏக்கர், உள்ளடக்கியது. மேலும் Methuselah bristlecone pine எனப்படும் உலகின் மிக நீண்டநாள் உயிர்வாழும் மரம் இங்கு உள்ளதாக கூறப்படுகிறது.

6. Bialowieza வனம், போலந்து, பெலாரஸ்

Bialowieza எனப்படும் இந்தக் காடு பெலாரஸ் மற்றும் போலந்து எல்லை வரை உள்ள ஒரு புராதனமான காட்டின் கடைசியாக மீதமுள்ள பகுதிகளில் ஒன்றாகும். இது ஒரு நியமிக்கப்பட்ட யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலமாகும்.

8. Daintree மழைக்காடு, ஆஸ்திரேலியா


ஆஸ்திரேலியா குயின்ஸ்லாந்தில் வடக்கு கிழக்கு பகுதியான கடற்கரையில் உள்ளது இந்த Daintree மழைக்காடு. உலகின் பழமையான மழைக்காடுகளில் ஒன்றான இங்கே எண்ணற்ற தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் உள்ளன. சுமார் 12,000 பூச்சி இனங்கள் இந்த செழிப்பான வெப்பமண்டல மழைக்காடுகளில் காணப்படுகின்றன. ஆஸ்திரேலியாவின் தவளை, ஊர்வன மற்றும் பையுள்ள இனங்கள் 30 சதவிகிதம், பேட் மற்றும் பட்டாம்பூச்சி இனங்கள் 65% மற்றும் பறவை இனங்கள் 18 வீதமாக இந்த பகுதியில் காணப்படுகின்றன.

8. Monteverde மேக வனம் , கோஸ்டா ரிகா


Monteverde மேகக் காடு Puntarenas மற்றும் Alajuela ஆகிய மாகாணங்களில் உள்ள Tilarán மலைத்தொடர் வழியாக உள்ளது. இங்கே 2500 தாவர இனங்கள், 100 பாலூட்டி இனங்கள், 400 பறவை இனங்கள், 120 ஊர்வன மற்றும் நீர்நில வாழ் உயிரினங்கள், மற்றும் பூச்சிகள் என ஆயிரக்கணக்கான உயிரினங்களை கொண்டுள்ளது.

9. Waipoua வனம், நியூசிலாந்து


நியூசிலாந்தின் Northland பகுதியில் அமைந்துள்ள  Waipoua வனம், மிக பெரிய kauri மரங்கள், Tane Mahuta மற்றும் Te Matua Ngahere எனும் மர வகைகளை கொண்டிருக்கிறது.

10. Caddo Lake,  அமெரிக்கா


டெக்சாஸ் மற்றும் லூசியானா இடையே எல்லையில் அமைந்துள்ளது, கேடோ எனும் இந்த ஏரி. இது 25.400 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச ராம்சரின் உடன்படிக்கையின் கீழ் பாதுகாக்கப்படுகிறது. இது உலகின் மிகப்பெரிய சைப்ரஸ் வனம் என பெயரிடப்பட்டுள்ளது.