புகைப்படம்
Typography

வேலை நிமித்தும் ஒரே ஓட்டமாக ஓடிக்கொண்டிருக்கும் எம்மை நிறுத்தி இளைப்பாற வைப்பது சுற்றுலாப்பயணங்கள். அது தரும் அனுபவமும் குதூகலமும் மீண்டும் எம்மை உற்வேகத்துடன் ஓடவைக்கும்.

ஆனால் இந்த நாடோடி ஜோடி சுற்றுலா செல்வதை மட்டுமே வேலையாக ஓடிக்கொண்டு இருக்கிறார்கள்.

சுற்றுலாப்பிரியர்களான நிக் மற்றும் ஹன்னா எனும் ஜோடி நான்கு மாத விடுமுறையில் சுற்றுலா சென்ற இடங்களை வாய் பிளந்து, புருவம் உயர்த்தி பார்க்கவைக்கும் புகைப்படங்களாக இன்ஸ்டகிராமில் பதிவு செய்து வந்தனர், கிட்டத்தட்ட 5000 பிந்தொடர்வோர் அவர்களின் கணக்கை தொடர மாற்றி யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

9 - 5 மணிநேர வேலையை விட எவ்வளவோ இருக்கிறது என மக்களுக்கு உதவும் நோக்கோடு சுற்றுலா சென்ற இடங்களை புகைப்படங்களுடன் ஆவணப்படங்களாகவும் வலைத்தளம் ஒன்றின் ஊடாக பதிவேற்றத் தொடங்கினர்.

2016ம் ஆண்டு தொடங்கப்பட்ட இவர்களின் "சால்ட் இன் அவர் ஹெர்" எனும் சுற்றுலா இணையத்தளம் பெரும் வரவேற்பை பெற்று மூன்றே வருடங்களில் பிரபலமானது. அதையடுத்து இருவரின் இந்த சிறந்த முயற்சிக்கு கிடைத்த ஸ்பான்சர்ஷர்ஸ், ஒத்துழைப்பு மற்றும் அதிகரித்த ஊடக கவனத்தால் "முழுநேர, கடின, கனவுத் தொழிலாக" <பயணம்> மாறியது.

நெதர்லாந்து நாட்டைச்சேர்ந்த நிக் ஹன்னா ஜோடி இதுவரை இலங்கை, பாலி, மியன்மார், மொரிசியசு, கம்போடியா போன்ற நாடுகளுக்கும் போர்த்துக்கல், எசுப்பானியா, துருக்கி போன்ற நாடுகளுக்கும் பறந்துள்ளனர். இன்னும் ஜப்பான், ஓமான், ஐஸ்லாந்து என பறப்பதற்கான பட்டியலை தயார் செய்துவருகின்றனர்.

இதுவரை சென்ற இடங்களில் துருக்கியின் கப்பத்தோசியாவும் அங்கே அதிகாலையில் மேலே அனுப்படும் வெப்பக் காற்று பலூன்களும் மாயாஜாலம் நிறைந்தது என்கிறார்கள். மேலும் அங்கே மோட்டார் சைக்கிளில் சவாரி செய்த அனுபவம் மறக்கமுடியாதது எனவும் விவரிக்கிறார்கள்.

பயண அனுபவ கட்டுரைகளுடன் கூடிய சுவாரஸ்யமான புகைப்படங்கள், வீடியோக்கள் என இவர்களின் இணையத்தளத்தில் துலாவி உலா வரலாம்.

உங்கள் மடிக்கணனியை மூடாவிட்டால் வேலை நிற்காது எனக் கூறும் நிக், ஹன்னா படைப்பாற்றல், அர்ப்பணிப்பு, மற்றும் நம்பிக்கை ஆகியவையே எங்களின் வெற்றிக்கு காரணம் என்கிறார்கள்.

இதோ அவர்களின் ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள் சில:

இணையத்தளம் : salt in our hair

மூலம் : mymodernmet

BLOG COMMENTS POWERED BY DISQUS