புகைப்படம்

நத்தார் மாதத்தில் பிரகாசமும் குதூகலமும் தரும் நத்தார் சந்தைகளைவிட வேறு எதுவுமில்லை.

நத்தார் சிறப்பு கைவினைப்பொருட்கள், சுவையூட்டும் விருந்துகள் மற்றும் சூடான பானங்கள் ஆகியவற்றை விற்பனைசெய்யும் பண்டிகைக் களஞ்சியங்கள் இவை. இது குளிர்கால விந்தையுலகத்தில் இருப்பது போலாகும்.

உலக நாடுகளில் இவ்வாறான மிகப்பிரபலமான மாயாஜால ஆறு நத்தார் சந்தைகளை பட்டியலிட்டு இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

1. "வியன்னாவின் கிறிஸ்துமஸ் கனவு" - ஆஸ்திரியா,

ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரியா நாட்டின் வியன்னா எனும் நகரில் உள்ள வியன்னா டவுன் ஹால் சதுக்கம் "வியன்னாவின் கிறிஸ்டி கனவுச்சந்தையாக மாறிவிடும். பாரம்பரிய ஆஸ்திரி சந்தை என்பதால் வரும் விருந்தினர்களுக்கு கையால் தயாரிக்கப்பட்ட பொருட்கள், தரமிக்க சூடான மது வகைகள் போன்றவைகள் கிடைக்குமாம். அதேபோல் பனிச்சறுக்கு விளையாட்டுகள் மற்றும் நத்தார் கரோலர்களும் உண்டு.

2. பெர்குவே நகர், பழைய டவுன் சதுக்கத்தின் கிறிஸ்துமஸ் சந்தை - செக் குடியரசு

பழைய டவுன் சதுக்கத்தில் நடக்கும் பாராகுவேவின் கிறிஸ்துமஸ் சந்தை, தலைநகரத்தின் மிகவும் பிரியமான மரபுகளில் ஒன்றாகும். இங்கே, ஐரோப்பிய சந்தைப்பொருட்கள் கையால் செதுக்கப்பட்ட மர பொம்மைகள் மற்றும் கையால் வடிவமைக்கப்பட்ட கண்ணாடி பொருட்கள் உள்ளிட்டவற்றைக் காணலாம். அதே போல் செக்குடியரசு நாட்டின் சிறப்பு, mulled மேட், சூடான தேன் பானம் trdelnik, மற்றும் வாதுமை கொட்டை கேக் என்பவகைகளும் கிடைக்கும். அடுத்தாண்டு ஜனவரி 6 திகதி வரை நடைபெறுகிறது.

3. ஸ்ட்ராஸ்பேர்க்கில் பிளேஸ் டி லா கேட் டிரெல்லில் கிறிஸ்துமஸ் சந்தை - பிரான்ஸ்

பாரிஸ், பிரான்சின் தலைநகரமாக இருக்கலாம், ஆனால் ஸ்ட்ராஸ்பேர்க் "கிறிஸ்துமஸ் தலைநகரமாக" உள்ளது. நவம்பர் பிற்பகுதியில் தொடங்கி, பிளேஸ் டி லா கதீட்ரலேவின் நகரத்தின் கிறிஸ்மஸ் சந்தை விடுமுறை நாட்களை வரவேற்கிறது. 300 கடைகள் தேவதைபோன்ற அலங்கார விளக்குகள், கம்பீரமான பெரிய கிறிஸ்துமஸ் மரம், திகைப்பூட்டும் இசை நிகழ்ச்சிகள், மற்றும் ஒரு மறக்க முடியாத கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் என களைகட்டுமாம் இந்த சந்தை. இங்கே, உள்ளூர்வாசிகளும், சுற்றுலா பயணிகளும் ருசிக்கக்கூடிய அல்சேஸ் பிராந்தியத்தின் அனைத்து வகை இனிப்பு வகைகளான Bredele, சர்க்கரை மற்றும் மசாலா கிறிஸ்துமஸ் குக்கீ, மற்றும் சூடான ஒயின் போன்றவைகள் கிடைக்கிறது. 

4. கொலோன் நகரின் "கதீட்ரல் கிறிஸ்துமஸ் சந்தை" - ஜெர்மனி

ஒவ்வொரு டிசம்பர் மாதமும், "கதீட்ரல் கிறிஸ்துமஸ் சந்தை" ஜெர்மனியின் கொலோன் நகர மையத்தில் தோன்றும். பிற கிறிஸ்துமஸ் சந்தைகள் போன்று நியாயமான பிராந்திய சிறப்பம்சங்களை வழங்குகிறது. தொத்திறைச்சி இருந்து ஜெர்மன் பழ கேக்குகள் வரை கிடைக்கிறது. இந்த சந்தை கொலோன் கதீட்ரல் எனும் வட ஐரோப்பாவின் மிகப்பெரிய கோதிக் தேவாலயத்தின் அழகிய காட்சியையும், 100 க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளையும் பண்டிகை பொழுதுபோக்குகளின் வடிவங்களையும் வழங்கி பெருமைப்படுத்துகிறது.

5. "தலின் கிறிஸ்துமஸ் சந்தை" - எஸ்தோனியா

1441 முதல், எஸ்தோனியா தலின் நகர் டவுன் ஹால் சதுக்கத்தில் கிறிதுமஸ் மரம் அலங்கரிக்கப்பட்டுவருகிறது. இது கிறிஸ்மஸ் மரம் ஒன்றை அமைப்பதற்காக ஐரோப்பாவில் முதலாவது இடமாகவும், ஒரு கிறிஸ்துமஸ் சந்தையைப் பெற சரியான இடமாகவும் அமைகிறது! கிறிஸ்துமஸ் மரம்தான் இங்கே சிறப்பம்சம் என்கிறார்கள். அத்தோடு எஸ்தோனிய கிறிஸ்துமஸ் உணவுவகைகளான கருப்பு புட்டு, புளிப்பு முட்டைக்கோஸ், கிங்கர்பிரெட் மற்றும் சூடான கிறிஸ்துமஸ் பானங்கள் என கிடைக்கிறது.  இது மற்றொரு சிறப்பு விருந்தினரையும் கொண்டுள்ளது: அவர்தான் நத்தார் தாத்தா!

6. சிகாகோவின் கிறிஸ்மஸ் சந்தை : இலினொய் ஐக்கிய அமெரிக்கா குடியரசு

இறுதியாக, அமெரிக்கா குடியரசு, சிகாகோ நகரின் இடைக்கால பாரம்பரியமான கிறிஸ்மஸ் சந்தை. ஜெர்மனி வழிவந்த இந்த சந்தை கையால் செதுக்கப்பட்ட கொட்டை வெட்டிவகைகள், குயில் கடிகாரங்கள் உங்களை பழைய ஐரோப்பியத்திற்கு அழைத்துச்செல்லும். அதன் அமெரிக்காவின் மிகுந்த பரபரப்பான நகரங்களில் ஒன்றான சிகாகோவில் அழகிய வணிக அமைப்புடன் பாரம்பரியத்தில் நவீன திருப்பமாக அமைந்துள்ளது.

Source : mymordernmet

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமாகி எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, உப்புக்கருவாடு உட்பட பல படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் நந்திதா ஸ்வேதா.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

"உங்கள் கனவை எங்கள் ஜம்போவின் காதில் கிசுகிசுக்கவும், யாருக்கு தெரியும், அது நனவாகும்! " எனக் கட்டியம் கூறியவாறு, மாணவர்கள் மத்தியில் சிறுகதை எழுதும் ஆர்வத்தினை ஏற்படுத்த முனைகிறது ஆம்பல், சிறுகதைப்போட்டி.

உலகிலேயே மிக சிக்கலான மற்றும் மிகப் பெரும் எந்திரம் அல்லது கருவி ஜெனீவாவில் அமைந்துள்ள LHC எனப்படும் 27 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட நிலக்கீழ் துகள் முடுக்கி கருவி (Particle accelerator) ஆகும்.

சாருஹாசன் நடித்து கடந்த வருடம் வெளியாகி ஓரளவுக்கு வசூலும் செய்த படம் தாதா 87. இப்படத்திற்கு விஜய் ஸ்ரீ கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியிருந்தார்.

ஊரடங்கு நீடித்திருக்கும் நிலையில் யோசுவா ஆரோன் எனும் யூடியூப் இசைப் பிரபலம் சூப்பர் சிங்கர் பாடகர்களை ஒருகிணைத்து