புகைப்படம்

சுய தனிமைப்படுத்தலில் வீட்டில் முடங்கிப்போனாலும் இவர்கள் சுய சவால்கள் விடும் செயற்பாடுகளில் சுவாரஸ்யமாக கலக்கியுள்ளனர்.

மிகப்பெரும் பழமைவாய்ந்த பிரபல ஓவியங்களை உள்ளடக்கி காட்சிபடுத்தி வந்த அமெரிக்க அருங்காட்சியகம் ஒன்று வைரஸ் பரப்பினால் மூடப்பட்டுள்ளது. ஆனாலும் அருமை மிகு ஓவியங்களை கண்டு களிக்க இயலாத மக்கள் இக்கலைகளுடன் இணைந்திருப்பதற்காக ஒரு சவால் யோசனை ஒன்றினை உருவாக்கியது. அதன் அடிப்படையில் அவர்களது சமூக வளைத்தளமான இன்ஸ்டகிராமில், இருக்கும் பொருட்கள் மற்றும் மனிதர்களை கொண்டு "கலைப்படைப்பு ஒன்றை மீள் உருவாக்கல்" என சவால் விட்டது. அதாவது அருங்காட்சியக இன்ஸ்டகிராம் அக்கோண்டை ஃபலோ செய்பவர்களுக்கு, எங்கே இந்த ஓவியங்களில் இருப்பதை போன்று நீங்களும் உங்கள் வீட்டில் இருந்தபடியே இருக்கும் பொருட்களை வைத்து இந்த சாலேஞ்சை செய்யுங்கள் பார்ப்போம் என்று கேட்டிருக்கிறது. அத்தோடு சில பல உதாரண புகைப்படங்களையும் வெளியிட்டது. போதாதா இது போதாதா!

தெரிவு செய்யப்பட்ட ஓவியங்களில் இருப்பது போன்று மக்கள் தங்கள் வீட்டு செல்லப்பிராணிகளைக் கூட அதில் உள்ளவாறு அமர்ந்தும், படுத்துக்கிடந்தும், செயல்களை செய்வதுபோலவும் புகைப்படங்களாக எடுத்து வெளியிட்டு இருக்கிறார்கள். டாய்லட் டிசு பேர்ப்பர்களை கூட விட்டுவைக்கவில்லை, அனைத்தையும் கொண்டுவந்து தமது படைப்பாற்றல் திறனை புகைப்படங்களில் புகுத்தித்தள்ளியிருக்கிறார்கள். ஏற்கனவே கோவிட் கிலாசிக் எனும் இன்ஸ்டகிராம் இது போன்ற கலை ஓவியங்களை மீள் உருவாக்கல் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதோடு சுவாரஸ்யமான புகைப்படங்களாவும் பதிவிட்டுவருகிறார்கள்.

இதோ அதில் சில புகைப்படங்கள் :

நன்றி : mymodernmet

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வந்த ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் எதிர்பாராமல் நிகழ்ந்த கோர விபத்தால் உதவி இயக்குநர் உட்பட பலர் உயிரிழந்தனர். இதனால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

தமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.

ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரவுலிங், தனது இக்காபாக் (The Ickabog) எனும் ஒரு அரக்கனைப் பற்றிய விசித்திரக் கதையின் முதல் பாகத்தை ஆன்லைனில் இலவசமாக வெளியிட்டுள்ளார்.

21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 2003 ஆமாண்டு விண்ணுக்கு பூமியின் தாழ்வு ஒழுக்கில் வலம் வந்து கொண்டிருக்கும் ISS என்ற சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்று திரும்புகையில் எந்திரக் கோளாறால் கொலம்பியா என்ற விண் ஓடம் விபத்தில் சிக்கியது.

கொரோனா வைரஸ் குணப்படுத்தக் கூடிய ஒன்று தான். அதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தது தேவையில்லாது, என்று நடிகரும் தயாரிப்பாளருமான மன்சூரலிகான் தெரிவித்துள்ளார்.

தமிழர் கலைகளில் 'வில்லுப்பாட்டு' ஒரு முதுகலையாகும். போர்களங்களில் போராடிய வீரர்கள் மத்தியிலிருந்து, கதையும் பாடலுமாகப் பிறந்த கலைவடிவம் எனவும் சொல்கின்றார்கள். இதனைத் தமிழகத்தில் பன்னெடுங்காலமாகச் சொல்லி வந்த ஒரு பெண்ணின் வரலாற்றினை, வாழ்வினை, தமிழுக்குப் புதிய இசைவடிவமான ராப் பாடல் மூலம் சொல்கின்றாள் ஒரு பெண்.