புகைப்படம்

இந்திய அளவில் கொரோனா அச்சுறுத்தலால் அத்தியாவசிய தேவைகளைத் தாண்டி எந்தவொரு பணிகளுமே நடைபெறவில்லை. பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கிப் போயிருந்தனர். அனைவருடைய வாழ்க்கையிலும் இந்த ஊரடங்கை மறக்கவே முடியாது.

இதுவொரு திருப்புமுனை. இதை வரும் தலைமுறைகளுக்காக நாம் எப்படிச் சொல்லப் போகிறோம் என்பது அனைவருடைய மனதிலே இருந்தது. அதை இயக்குநர் பரத்பாலா செயல்படுத்தியுள்ளார்.

ஒவ்வொரு முறையும் எல்லா தலைமுறைக்காகவும் இந்தியாவை புதிய கோணத்தில் காட்சியமைத்து பதிவு செய்யும் இவர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து 'வந்தே மாதரம்', 'ஜன கன மன', மேலும் ஜியோ உடோ படோ ஜீதோ, காமன்வெல்த் விளையாட்டுகளுக்கான அதிகாரப்பூர்வ காணொலி என அனைத்துமே மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவை. இந்தக் காணொலிகள் அனைத்துமே தலைமுறைகள் தாண்டி கொண்டாடப்படக் கூடியவை. தற்போது இந்த கொரோனா ஊரடங்கை 'மீண்டும் எழுவோம்' என்ற பெயரில் ஆவணப்படுத்தியுள்ளார் புலம் பெயர் தொழிலாளரிகளின் வலியைப் பேசிய ‘மரியான்’ படத்தை இயக்கிய இவர் தொழில்நுட்ப வளர்ச்சியை வைத்து இதனை சாத்தியப்படுத்தியுள்ளார்.

வரும் தலைமுறைகளுக்காக இயக்குநர் பரத்பாலாவும், அவருடைய 117 பேர் கொண்ட 15 குழுக்களும் இதுவரை பார்த்திராத தேசிய ஊரடங்கை தங்கள் கேமராக்களில் காட்சிகளாகச் சிறை பிடித்துள்ளனர். கண்டிப்பாக வரும் தலைமுறையினர் கண்ணுக்குத் தெரியாத ஒரு நோய் தொற்றால் இந்தியா எப்படி முழுமையாக ஸ்தம்பித்தது என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.

இந்தப் படப்பிடிப்புக்கான தலைமை கட்டுப்பாட்டு அறையை மும்பையில் அமைத்து அங்கு ஒரு குழு வாரத்தின் அனைத்து நாட்களும் பூட்டப்பட்டே இருந்தனர். 14 மாநிலங்களில் பல்லாயிரம் கிலோ மீட்டர் பயணித்து படம்பிடித்த காட்சிகள் அனைத்தையுமே இந்த குழுவினர் ஒருங்கிணைத்தனர். களத்திலிருக்கும் குழுக்கள் வாட்ஸ்-அப் வீடியோ கால், ஜும் செயலி உள்ளிட்ட தொழில்நுட்ப வாயிலாக பரத்பாலாவை தொடர்பு கொண்டு இதனை படமாக்கினர். தேவைப்படும் காட்சிகளை இங்கிருந்து கூற அதனைப் படக்குழுவினர் முழுக்க தொழில்நுட்ப வாயிலாகவே இந்தியா முழுக்கவே காட்சிப்படுத்தி சாதனை புரிந்துள்ளனர்.

4 நிமிடங்கள் கொண்ட இந்த ஆவணப் படம் கண்டிப்பாக இந்தியாவின் கொரோனா ஊரடங்கைப் பார்ப்பவர்களுக்கு எடுத்துரைக்கும் இப்படத்திற்கு 'மீண்டும் எழுவோம்' என்று பெயரிடப்பட்டிருக்கிறது.இப்படிப்பட்ட ஊரடங்கிலிருந்து, பொருளாதார இழப்பிலிருந்து எப்படி மீண்டு வந்துள்ளோம் என்பதை வரும் தலைமுறையினர் கண்டிப்பாக உணரும் வகையில் இருக்கும். நாளை 6ம் திகதி வெளியிடத் திட்டமிட்டுள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது .

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

;

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

பாரதிராஜா நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கியதால் கடுப்பான தயாரிப்பாளர் கவுண்ஸிலைச் சேர்ந்த பலரது எதிர்பார்ப்பு சினிமா தொழிலாளர்கள் சங்கமான பெப்சி உடைய வேண்டும் என்பது. அதை எடுத்துக்காட்டுவதுபோல ஒரு தயாரிப்பாளின் பதிவு அமைந்துள்ளது. அவர் தனது பதிவில்:

லொகார்னோ திரைப்பட விழாவில் குறுந்திரைப்படங்களுக்கான போட்டியில், சர்வதேச போட்டிப் பிரிவில் போட்டியிடும் திரைப்படம் "1978" இல் பாகிஸ்தான்.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

" இயற்கை மற்றும் விலங்குகளின் மீதான மனித நேசிப்பினையும், மனிதர்களுடனான நல்லிணக்கத்தை விலங்ககளிடமும், தோற்றுவிப்பதன் அடையாளமாக இந்தியக் கோவில் யானைகளை நான் பார்க்கிறேன். தயவு செய்து அந்த மரபை அழித்துவிடாதீர்கள் ! " என்றார் இயக்குனர் அன்னா போல்மார்க் (Anna Bohlmark ).

நாம் தனிமையில் இல்லை...' (We are Not Alone!)  4 தமிழ்மீடியாவின் புதிய அறிவியல் தொடர். எமது பிரபஞ்சம் மிகவும் ரம்மியமானது.

கோலிவுட் டோலிவுட் மல்லூவுட் சாண்டல்வுட் என தென்னிந்திய திரையுலகில் முக்கிய நாயகியாக வலம்வந்து கொண்டிருப்பவர் கீர்த்தி சுரேஷ்.

வில்லியம் சாட்னர் எனும் ஆங்கில திரைப்பட இயக்குனர் யானைகளை அடிப்படையாக கொண்டு 'வனத்திற்குள் திரும்பு' என்ற திரைப்படத்தை எடுத்தார்.