புகைப்படம்

புகைப்படக் கலைஞர்கள் தாங்கள் எடுக்கும் படங்களில் காலத்தை உறையச் செய்யும் வித்தையைச் செய்கிறார்கள். இன்று எல்லோரது கைபேசியிலும் கேமரா இருக்கிறது. எல்லோருமே இன்று புகைப்படக்காரர்கள்தான்.

ஆனால், எல்லோராலும் காலத்தின் வாசனையை புகைப்படங்களில் உணரச்செய்யமுடிவதில்லை. அப்படியொரு அற்புதமான புகைப்படக் கலைஞர் ஜானி ஜோ. அமெரிக்காவின் க்ளிவ்லேண்டைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர். நீண்டகாலமாக கைவிடப்பட்ட அழிந்துபோன இடங்களை க்ளிக் செய்வதில் பேரார்வம் கொண்டவர்.

புல் பூண்டுகள் மண்டி கவனிப்பாரற்றுக் கிடக்கும் மருத்துவமனைகள், பாழடைந்த தேவாலயங்கள், விளையாட்டு அரங்குகள், மழைநீர் தேங்கி வனமாய் மாறிய பூங்காக்கள், ரயில்நிலையங்கள் என ஜானி ஜோவின் கண்களில் பட்டவை அனைத்தும் கைவிடப்பட்ட கட்டடங்கள். அழிந்த உலகில் இயற்கையின் பேரழகை சதா தனது கேமரா கண்களின் வழியாக தரிசித்துக்கொண்டேயிருக்கும் கலைஞன்.

இங்கே நீங்கள் காணும் ஜானி ஜோவின் படங்களை அவர் நியூபரியில் கிளிக்கியிருக்கிறார். நாற்பதுகளின் பிற்பகுதியில் ஓஹயோ மாகாணத்தின் நியூபரியில் உள்ள தோட்டத்தில், பழைய போர் விமானங்களைச் சேகரித்துவைத்திருந்தார் ஸ்க்ராப்யார்டு ஊழியரான வால்டர் சாப்லாட்டா. 2010ஆம் ஆண்டு சாப்லோட்டாவின் மரணத்திற்குப் பிறகு விமானங்களின் இந்த மயானக்கூடம் அவரது உறவினர்களால் ரகசியமாக பாதுகாக்கப்பட்டது. பழைய பொருட்களை வாங்கிக்குவிக்கும் வணிகர்களுக்குப் பயந்தே அப்படி பொத்தி வைத்திருந்தார்கள்.

இரண்டாம் உலகப் போரில் அலைந்து திரிந்து குண்டு மழை பொழிந்த விமானங்கள் ஓய்வெடுக்கும் இந்த இடத்தை மயானம் என்றே குறிப்பிடுகிறார் ஜானி ஜோ. இங்கே 30 விமானங்களும், 50 விமான எந்திரங்களும் இருக்கின்றன. வரலாறு உறைந்துள்ள ஒரு திறந்தவெளி அருங்காட்சியகம். “அதுவொரு கலைப்படைப்பைப் போல பிந்தைய அப்போகலிப்டிக் பார்வையை உருவாக்குகிறது” என்கிறார் ஜோ. இந்த விமானங்கள் பொழிந்த குண்டுகளில் எத்தனை மனிதர்கள் உயிரிழந்திருப்பார்கள். ஆயிரம் வார்த்தைகளை உங்களுக்குச் சொல்லும் இந்தப் படங்கள். ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் பார்க்கவேண்டிய நம்பமுடியாத இடம் இது என்று கூறும் ஜோவின் படங்கள் பார்ப்பவர் மனங்களில் இருளையும் திகிலையும் கொண்டுவந்து கொட்டுகின்றன. ‘இன்றைய சிதைவுகள் நேற்றின் நினைவுகள்’ என்று புகைப்படக்காரர் ஜானி ஜோ பொன்மொழி உதிர்க்கிறார்.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் எச்.விநோத் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடித்து வரும் படம் 'வலிமை'.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

முந்தைய பாகத்துக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! - பாகம் - 2 (We are Not Alone..Part-2)

கடந்த தொடரில் நாசாவின் SETI என்ற திட்டம் குறித்துத் தெரிவித்திருந்தோம். அது தொடர்பான விபரங்களை சுருக்கமாக முதலில் பார்ப்போம். SETI என்பது ஆங்கிலத்தில் Search for extraterrestrial intelligence அதாவது விண்வெளியில் அறிவுத்திறன் மிக்க உயிரினங்களுக்கான தேடல் என்று விரிவு பெறும்.

தமிழ் நாட்டிற்கே தலைமை தாங்க தகுதியானவர்கள்...அரசியலை தூய்மைப்படுத்திவிடுவார்கள்...

டாம் & ஜெர்ரி ஆகிய பூனையும் எலியும் விரட்டி விரட்டி சண்டையிட்டுக் கொள்ளும் காட்டூன்களை ரசிக்காத ரசிகர்களே இல்லை எனலாம்.