புகைப்படம்

பன்முகப் பண்பாட்டை பாதுகாப்பதில் மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகள் முன்னோடிகள் எனலாம். அதற்கு தற்போது நடந்துவரும் ஒரு கண்காட்சியே நல்ல அடையாளம். மலேசியாவில் உள்ள பினாங்கு மாநிலத்தில் உள்ளது ஜார்ஜ் டவுன்.

அங்கே இந்திய மரபியல் அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் 200 ஆண்டுகள் பழைமையான புராதான பொருட்கள் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவற்றை கட்டணம் ஏதுமின்றி காணமுடியும்.

இந்த அருகாட்சியகத்தின் சேமிப்பில் 100 ஆண்டுகள் பழமையான உணவு தூக்கு சட்டி (டிபன் கேரியர்), 300 ஆண்டுகள் பழமையான கால்சிலம்புகள், 200 ஆண்டுகள் பழமையான ஒலைச்சுவடி, எழுத்தாணி மற்றும் மலேசிய - இந்திய வம்சாவழினர் பயன்படுத்திய பாரம்பரியம் மிக்க பழங்கால பொருட்களான வெற்றிலைபாக்கு பெட்டி, 100 ஆண்டுகள்பழமையான ஜல்லிக்கட்டு காளைகளின் கழுத்துமணி, காளைமாட்டின் கொம்பில் சொருகும் கொப்பி, 100 வருடம் பழமையான யானை தந்தம், வெள்ளியினால் செய்யப்பட்ட மிதியடி எனப்படும் கால்கட்டை (பழங்காலக் காலணி), 100 ஆண்டுகள் முன்பு ஆங்கிலேயர் காலத்தில் மலேசிய இந்திய வம்சாவழி குடும்பத்தை சேர்ந்த புகைப்படங்கள், 1957 மலேசிய சுதந்திர காலகட்டத்தின் சேகரிப்புகளான தமிழில் எழுதப்பட்ட மலேசிய வரைபடம், மலேசிய சுதந்திர நாளன்று வெளியிடப்பட்ட மலேசிய வரைபடம் தாங்கிய ஆண்கள் சட்டை மற்றும் ஏராளமான புராதான பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளன.

இவை தவிர மறைந்த இந்தியத் தலைவர்கள் நேருஜி, சுபாஷ் சந்திரபோஸ், இந்திரா காந்தி, அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் பல இந்தியா, தமிழ்நாட்டு தலைவர்களின் மலேசிய வருகையை நினைவூட்டும் பழமையான புகைப்படங்களையும் இங்கே காணலாம். அதிலும் 1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்ற நாளில் மலேசியாவில் இந்த கொண்டாட்டத்தை கோலாகலமாக கொண்டாடிய புகைப்படங்கள் இங்கே பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. அதுபோல் பல மலேசிய- இந்திய தொடர்பான பல ஆவணங்கள் பாதுக்காத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

உதாரணத்திற்கு அன்று எஸ்.எஸ்.ரஜுலா, ஸ்டேட் அஃப் மெட்ராஸ் மற்றும் சிதம்பரம் போன்ற தமிழகக் கப்பல்களின் புகைபடங்கள், மலேசிய- இந்திய கப்பல் பயணத்திற்காக டிக்கெட்டுகள் , கப்பலுக்காக காத்திருந்த மக்களின் புகைபடங்கள் , இந்தியாவிற்கு புறப்படும் முன் பொருட்களும் அன்பளிப்புகளும் கொண்ட பெட்டிகளை மக்கள் சுமந்து நிற்கும் காட்சியின் புகைபடங்கள் , மற்றும் பல ஆவணங்களை இங்கே காணலாம். மேலும், இந்த புராதான அருங்காட்சியகத்தை காண பள்ளி , கல்லூரி , கல்வி ஆராய்சி மாணவர்கள் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஏராளமானவர் வந்து செல்கின்றனர். முக்கிய குறிப்பாக கோரோனா ஊரடங்கு முடிந்து கடந்த 4 ஜூலை 2020-ல் மீண்டும் அருங்காட்சியகம் பார்வைக்கு திறக்கபட்டுவிட்டது. தமிழ் மூதாதையர் வாழ்க்கைமுறை மற்றும் பாரம்பரியம் பற்றி இன்றைய தலைமுறைகள் அறிந்து கொள்ள இந்த அருங்காட்சியகம் நடத்தபடுவதாக இந்த அருங்காட்சியக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

 

- 4தமிழ்மீடியாவுக்காக மாதுமை

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் எச்.விநோத் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடித்து வரும் படம் 'வலிமை'.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

முந்தைய பாகத்துக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! - பாகம் - 2 (We are Not Alone..Part-2)

கடந்த தொடரில் நாசாவின் SETI என்ற திட்டம் குறித்துத் தெரிவித்திருந்தோம். அது தொடர்பான விபரங்களை சுருக்கமாக முதலில் பார்ப்போம். SETI என்பது ஆங்கிலத்தில் Search for extraterrestrial intelligence அதாவது விண்வெளியில் அறிவுத்திறன் மிக்க உயிரினங்களுக்கான தேடல் என்று விரிவு பெறும்.

தமிழ் நாட்டிற்கே தலைமை தாங்க தகுதியானவர்கள்...அரசியலை தூய்மைப்படுத்திவிடுவார்கள்...

டாம் & ஜெர்ரி ஆகிய பூனையும் எலியும் விரட்டி விரட்டி சண்டையிட்டுக் கொள்ளும் காட்டூன்களை ரசிக்காத ரசிகர்களே இல்லை எனலாம்.