புகைப்படம்

நவநாகரிக உலகம் பொதுவாக இளைய சமூதாயத்துடன் தொடர்புடையதாகவே பார்க்கப்பட்டு வருகிறது.

ஆனால் குந்தர் கிராபென்ஹாஃப்ட் மற்றும் பிரிட் கஞ்சா (Günther Krabbenhöft and Britt Kanja) எனும் முதியோர் ஜோடி தங்களின் தனித்துவமான நவநாகரிக ஆடைப்பாணியால் அனைவரையும் கவர்ந்து வருகிறார்கள். அவர்களின் வயதுக்கும் உடுத்தும் ஆடை உணர்வுக்கும் சம்பந்தம் இல்லை என்பதை கணக்கிடலாம்.

இவர்கள் இருவரும் அணியும் ஆடைகள் நியாயமான நவநாகரிகம். 75 வயதான க்ராபென்ஹாஃப்ட் பலவிதமான தொப்பிகளைக் கொண்ட மூன்று-அடுக்கு உடையை அடிக்கடி அணிந்துகொள்கிறார், அதே நேரத்தில் பிரிட் கஞ்சாவுக்கு நேர்த்தியான ஆடைகளுக்கும் பஞ்சமில்லை.

இந்த உலகம் அவர்களின் ஓடுபாதை என்பது தெளிவாகிறது, ஒவ்வொரு முறையும் அவர்கள் பொதுஇடங்களுக்குள் நுழைகையில் ஒரு நேரடி பேஷன் ஷோ காணும் வாய்ப்பை அங்கே வழங்குகிறார்கள் எனலாம்.

க்ராபென்ஹாஃப்ட் அவரது பாணிக்கு அங்கீகாரம் பெறுவது இதுவே முதல் முறை அல்ல. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே இதே போன்று தனித்துவமாக அணிந்திருந்த ஆடைகளுக்காக வைரலாகிவிட்டார். ஜேர்மனின் பேர்லின் நகர் ஃபேஷன் காட்சிகளிலும் பிரபல்யமாகிவிட்டார். மார்டா பிஆர் (MARTA PR) எனும் நிர்வாகத்தின் கீழ் தற்போது மாடலாக இருக்கும் க்ராபென்ஹோஃப்ட் "Just Be Yourself—You're Never Too Old to Be Young" எனும் புத்தகம் ஒன்றினையும் எழுதியுள்ளார்.

தன்னுடைய இத்தனை ஆண்டுகால வாழ்வியல் அனுபவங்களை மையமாக கொண்டு படைக்கப்பட்ட இந்த புத்தகத்தை பற்றி இவ்வாறு விவரிக்கிறார் : "உங்களுக்கு என்ன நேர்ந்தாலும், நீங்கள் வாழ்க்கையில் தோல்வியுற்றதாக நினைத்தால், பலவீனத்தை நீங்கள் பலமாகக் காணும் நாள் வரும்", பின்னோக்கிப் பார்த்தால் மட்டுமே எனது சொந்த விரக்தியின் நாட்களை நான் அடையாளம் காண்கிறேன்; அவற்றை பாராட்டவும் முடிகிறது. என்கிறார் க்ராபென்ஹோஃப்ட்.

அந்த நம்பிக்கையான கண்ணோட்டத்துடன், க்ராபென்ஹாஃப்ட்; வாழ்க்கை வழங்கும் எல்லாவற்றையும் பாராட்டக் கற்றுக் கொண்டார்; அதனை கண்டுகொள்ளவும் முடிகிறது. அவரது சமூக வலைத்தளங்களில் நிரப்பப்படும் கண்களை கொள்ளையடிக்கும் புகைப்படங்கள் அவரது தோற்றத்தை மட்டுமல்ல பிரிட் கஞ்சா மற்றும் சகல வயது நண்பர்களுடன் பேர்லின் கலாச்சாரத்தை அவர் ரசிக்கும் அழகையும் தருகிறது.

Source : Mymodernmat

 

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் எச்.விநோத் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடித்து வரும் படம் 'வலிமை'.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

முந்தைய பாகத்துக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! - பாகம் - 2 (We are Not Alone..Part-2)

கடந்த தொடரில் நாசாவின் SETI என்ற திட்டம் குறித்துத் தெரிவித்திருந்தோம். அது தொடர்பான விபரங்களை சுருக்கமாக முதலில் பார்ப்போம். SETI என்பது ஆங்கிலத்தில் Search for extraterrestrial intelligence அதாவது விண்வெளியில் அறிவுத்திறன் மிக்க உயிரினங்களுக்கான தேடல் என்று விரிவு பெறும்.

தமிழ் நாட்டிற்கே தலைமை தாங்க தகுதியானவர்கள்...அரசியலை தூய்மைப்படுத்திவிடுவார்கள்...

டாம் & ஜெர்ரி ஆகிய பூனையும் எலியும் விரட்டி விரட்டி சண்டையிட்டுக் கொள்ளும் காட்டூன்களை ரசிக்காத ரசிகர்களே இல்லை எனலாம்.