தொழில்நுட்பம்
Typography

இணையத்தில் தமிழில் எழுதுபவர்கள் தமிழா என்ற நிறுவனத்தின் இ கலப்பை மென்பொருள் பற்றி அறிந்திருப்பீர்கள்.

அண்மையில் அதன் மேம்படுத்தப்பட்ட பதிப்பு வெளியாகியுள்ளது.

e-Kalappai 3.0.4 பதிப்பில் Tamil99 , Phonetic, Typewriter, Bamini, Inscript ஆகிய 5 கீபோட்களில் யுனிகோட்டில் டைப் செய்வதற்கு வசதியுள்ளது. இதில் விண்டோஸ் 10 இலும் கூட தடையின்று தமிழில் எழுதுவதற்கு முடிகின்றது.

யுனிகோட்டில் எழுதும்போது F2 விசையை அழுத்துவதன் மூலம் ஆங்கிலம் மற்றும் தமிழுக்கு மாற்றிக்கொள்ளலாம்.

கணனியில் நிறுவாமல் பென் டிரைவ்களில் வைத்தே போர்டபிளாகவும் பயன்படுத்த வசதிசெய்து தந்திருக்கிறார்கள். (டவுண்லோட் பகுதியில் இருக்கும் ஷிப் பைலை எக்ஸ்டிராக் செய்து சேமித்து பயன்படுத்தலாம்)

இது ஒரு இலவச மென்பொருளாகும். தமிழில் எழுத ஆர்வமுள்ள புதியவர்களும் இந்த மென்பொருளை பயன்படுத்தி பயனுறலாம்.

விரிவாக இங்கே
http://ezilnila.com/archives/1672

டவுண்லோட் செய்வதற்கு இங்கே
http://thamizha.org/2010/11/19/ekalappai-v3.html

வீடியோ விளக்கம் இங்கே
http://vimeo.com/15567315

மேலும் தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பை இந்த இணைப்பில் காணலாம்.
http://ezilnila.com/archives/810

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்