தொழில்நுட்பம்

நிறுவனத்தின் சாம்சங்க் கேலக்ஸி  S9 ஸ்மார்ட்போன் 2018 பிப்ரவரி மாதத்தில்  சந்தைக்கு வந்துள்ளது.

செல்போன் தயாரிப்பின் முன்னணி நிறுவனமாக திகழும் சாம்சங் நிறுவனம் வெளியிடும் கேலக்ஸி வரிசை செல் போன்கள் பிரபலமானவை.

அண்மையில் அதன்  சாம்சங் காலக்ஸி S9 ஸ்மார்ட்போன், இந்த மாதம் வெளிவந்தது.இதனது புதிய வசதியாக அதி திறன் கொண்ட கமெரா லென்ஸ் இணைக்கப்பட்டு தரமான புகைப்படங்களைக் எடுக்கக்கூடியதாக அமைந்துள்ளது.

இதுவரை எந்த ஸ்மார்ட் போன்களிலும் இல்லாத கமெரா Adjustable aperture செட்டிங்க்கை கொண்டுள்ளது.166 கிராம் எடை மற்றும் 5.80 அங்குலம் திரை அளவு 4 GB RAM வசதி 64 GB மற்றும் அதற்கு மேலான சேமிப்புத்திறன் வசதி ஆகியவற்றுடனும்.

இதே வரிசையின் சாம்சங் காலக்ஸி S9 ப்ளஸ் செல் போனில் 6ஜிபி Ram  மற்றும் பேட்டரி 3500mAh

மேலும், 12 mp பின் கேமராவுடனும், 8 mp முன் கேமராவுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சாம்சங் காலக்ஸி S9 கைப்பேசியின் பேட்டரி திறன் 3000mAh. இதுமட்டுமல்லாது 4K வீடியோ பதிவு செய்து கொள்ளக்கூடிய வகையிலும் இந்த மொபைல் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டின் 8-வது பதிப்பான ஓரியோவுடன் இயங்குகின்றது. மேலும் ஆண்ட்ராய்டின் உடனடி மேம்படுத்தல்களையும் பெறக்கூடியதாக இருக்குமென நம்பப்படுகின்றது.

400 GB வரை சேமிப்புத்திறனை அதிகரிக்கக்கூடிய வசதியுடனும் இந்த ஸ்மார்ட்போன் இருக்கிறது.

மேலும் உங்களின் உருவ அமைப்பிற்கு ஒத்ததாக எமொஜிகளை உருவாக்கும் வசதியும் இதில் உள்ளது.

திரைக்கதை மன்னன் என்று போற்றப்படுபவர் இயக்குனர் சசி. அவரது எழுத்து வண்ணத்தில் உருவாகி கடந்த 2016-ல் வெளியான திரைப்படம் பிச்சைக்காரன். சுமாரான வெற்றிகளே கொடுத்துக்கொண்டிருந்தார் விஜய் ஆண்டனிக்கு பிச்சைக்காரன் பிளாக்பஸ்டர் வெற்றியானது.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

தமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.

ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரவுலிங், தனது இக்காபாக் (The Ickabog) எனும் ஒரு அரக்கனைப் பற்றிய விசித்திரக் கதையின் முதல் பாகத்தை ஆன்லைனில் இலவசமாக வெளியிட்டுள்ளார்.

எமது சூரிய குடும்பம் அமைந்துள்ள பால்வெளி அண்டம் (Milkyway Galaxy) மாத்திரம் பிரபஞ்சம் அல்ல என்றும் அதைப் போன்ற கோடானு கோடி அண்டங்கள் பிரபஞ்சத்தில் உள்ளன என்பதும் எப்போது ஊர்ஜிதமானது?

கொரோனா வைரஸ் குணப்படுத்தக் கூடிய ஒன்று தான். அதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தது தேவையில்லாது, என்று நடிகரும் தயாரிப்பாளருமான மன்சூரலிகான் தெரிவித்துள்ளார்.

தமிழர் கலைகளில் 'வில்லுப்பாட்டு' ஒரு முதுகலையாகும். போர்களங்களில் போராடிய வீரர்கள் மத்தியிலிருந்து, கதையும் பாடலுமாகப் பிறந்த கலைவடிவம் எனவும் சொல்கின்றார்கள். இதனைத் தமிழகத்தில் பன்னெடுங்காலமாகச் சொல்லி வந்த ஒரு பெண்ணின் வரலாற்றினை, வாழ்வினை, தமிழுக்குப் புதிய இசைவடிவமான ராப் பாடல் மூலம் சொல்கின்றாள் ஒரு பெண்.