தொழில்நுட்பம்
Typography

கூகிள் தேடல் பற்றி பல ஷாட்கட் கீகளை நீங்கள் அறிந்திருக்கலாம். இணையத்தளங்களுக்கான தேடுதலாக இல்லாமல் கூகிள் தேடல் பொறியில் வைத்தே பல தரவுகளை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

அவ்வாறு செய்வதற்கு சரியான சொற்தொடரை கொடுத்தல் அவசியமாகின்றது.

கூகிளில் நேரடியாக தகவல்களை பெற உதவும் மிகவும் பயனுள்ள சில ஷாட்கட் கீகளின் தொகுப்பு இங்கே. உதாரணத்திற்கு தேடப்பட்ட விடயங்களை அறிய குறிப்பிட்ட சொற்களின் மேலே அழுத்துங்கள்.

1. சினிமா , இசைக் கலைஞர்களின் திரைப்படங்கள் அல்லது இசை ஆல்பங்களை அறிவதற்கு  "[artist] [movies or albums]"  அல்லது  "[artist] songs"  என்று கூகிளில் என்டர் செய்தால் திரைப்படங்கள் அல்லது இசை ஆல்பம் தொடர்பான விடயங்கள் பட்டியலிடப்படும்.

2. திரைப்படங்கள் வெளிவரும் திகதியை அறிவதற்கு "[name of movie or game] release date"

3. பிரபலங்களின் இறந்த திகதியை அறிவதற்கு  "[name of famous person] death,"

4. நகரமொன்றின் சனத்தொகையை அறிவதற்கு  "[city] population."

5. காலநிலை தெரிந்துகொள்வதற்கு  "weather [city name]"

6. நேர வித்தியாசத்தை கண்டுபிடிக்க "time [country name]"

7. Sunrise , sunset தெரிந்துகொள்ள  "sunrise [city name]," அல்லது

8. "sunset [city name]." என்பதை அழுத்துங்கள்.

9. கால்குலேட்டரை செயற்படுத்துவதற்கு அல்லது

10. கால்குலேட்டர் என நேரடியாக டைப் செய்ய வேண்டும்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்