தொழில்நுட்பம்
Typography

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. 'எழுத்துக்களுக்கெல்லாம் 'அ' முதலானதாயிருப்பதுபோல உலகுக்கு இறைவன் முதல்வனாக இருக்கிறான். அழகு தமிழை இலகுவழியில் கற்றுக்கொள்ள  எளிய முறையொன்று இங்கே அறிமுகமாகிறது.

சிறுபிள்ளைகளுக்கு தமிழ் எழுத்துக்களைச் சொல்லிக்கொடுக்கும்போது, எழுதப் பழக்கும் போதும், எழக் கூடிய சிரமங்களைக் கருத்திற்கொண்டு, தன் அனுபவத்தினடிப்படையில் இந்தப் புதிய முறையை 10 வருடங்களுக்கு மேலாக வடிவமைத்து பராமரித்து வருகின்றார் 68 வயது இளைஞனான திரு பொள்ளாச்சி நசன்.

தாய் தமிழ் கல்வி நிலைய ஆசிரியராகவும் விளங்கும் அவரது அனுபவ முத்திரை, இதன் ஒவ்வொரு படிகளிலும் துல்லியமாய் துலங்குகின்றது. இங்கே அதனை இனைத்துக் கொள்ள அனுமதியளித்த அவருக்கு எமது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.  இனி இந்த எளிய முறைக் கற்கையினூடு உங்கள் பிள்ளைகளுக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்க வாருங்கள் என வேண்டுகின்றோம்.

அவரது தளத்திற்கான இணைப்பு இங்கே http://www.thamizham.net/

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்