தொழில்நுட்பம்
Typography

ஏற்கனவே பல புதிய வசதிகளை வழங்கி வாடிக்கையாளர்களைக் கவரும் சாம்சங்க் தற்போது  இன்னுமொரு புதிய வசதியை தருகின்றது. சாம்சங்க் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான சாம்சங்க் கலெக்ஸி எஸ் 9 ஸ்மார்ட் தொலைபேசியில் இரத்த அழுத்த பரிசோதனை செய்யும் வசதியை வழங்குகிறது.

இதனை செய்வதற்கு முதலில் நீங்கள் உங்கள் தொலைபேசியில் குறிப்பிட்ட My BP lap அப்ஸை  நிறுவ வேண்டும். அதன்பின்னர் தொலைபேசியில் அதன் பின் பக்கம் உள்ள சென்சர்கள் மூலம் இரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்யலாம்.

பொதுவாக ஸ்மார்ட் தொலைபேசிகளில் இதயத்தின் துடிப்பை அறிந்து கொள்ளும் வசதி உள்ளமை நீங்கள் அறிந்ததே இப்போது மேலும் ஒரு படி மேலே சென்று  உடலில் இருக்கும் இரத்தத்தின் அழுத்தத்தினை அளவீடு செய்யும் முறையை அறிமுகம் செய்து வைத்துள்ளது சாம்சங்க்.உண்மையில் இரத்த அழுத்த விகிதத்தை துல்லிய அளவை இதன் மூலம் பெற முடியாது எனினும் அழுத்த விகிதம் கூடியுள்ளதா அல்லது குறைந்து உள்ளதா என்பதை துல்லியமாக கணிக்கின்றது இந்த மொபைல் அப்ஸ்.

குறிப்பு - இந்த அப்ஸ் சாம்சங்க் கலெக்ஸி எஸ் 9 ஸ்மார்ட் தொலைபேசியில் மட்டுமே இயங்குகின்றது

இணைப்பு

தொடர்புடைய பதிவு

​சாம்சங் நிறுவனத்தின் சாம்சங்க் கேலக்ஸி S9 ஸ்மார்ட்போன் அறிமுகம்

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்