தொழில்நுட்பம்

உங்களின் பேஸ்புக் புரோபைல் பக்கம் டைம்லைன் என்ற புதிய தோற்றத்திற்கு ஏற்கனவே மாறிவிட்டதை அறிவீர்கள்.

இந்நிலையில் சிலரது பக்கங்கள் டைம்லைனுக்குரிய சரியான அளவைக்கொண்ட கவர் புகைப்படம் மாற்றப்படாமல் அழகிய தோற்றமின்றி காணப்படும்.

இதற்கென பயன்படுத்துவதற்கு சரியான அளவுள்ள புகைப்படங்கள் பலரிடம் இருக்காது.

அவ்வாறு பெரிய புகைப்படங்கள் இருந்தாலும் பேஸ்புக்கிலுள்ள பிரைவசி சிக்கல்களால் சொந்த புகைப்படங்களை பயன்படுத்துவதற்கும் பலர் விரும்புவதில்லை.

இக்குறையை நிவர்த்தி செய்யவென 4தமிழ்மீடியாவின் மனமே வசப்படு பிரிவினர் டைம்லைனில் வால்பேப்பராக உபயோகிக்கவென சில புகைப்படங்களை உருவாக்கி தந்துள்ளனர்.

அவற்றில் மனதை வசப்படுத்தும் வரிகளுடன் இணைந்த புகைப்படங்களும் உள்ளன.  இவற்றை உங்கள் பேஸ்புக் டைம்லைனில் பயன்படுத்தி பேஸ்புக் புரோபைலை அழகாக்க முடிகின்றது.

டைம்லைன் கவர் புகைப்படத்தை மாற்றும் முறை

1. முதலில் மனமே வசப்படு : பேஸ்புக் டைம்லைன் புகைப்படங்கள்! என்ற இப்பக்கத்தில் உள்ள புகைப்படமொன்றை உங்கள் கணினியில் சேமியுங்கள்.

சேமிக்கும் முறை : Firefox, Chrome ஆகிய பிரவுசர்களில் டத்தின் மீது வலது கிளிக், பின்னர் Save image as.
Internet Explore பிரவுசரில் படத்தின் மீது வலது கிளிக், பின்னர் Save picture as செய்து தேவையான ஃபோல்டரை தெரிவு செய்து சேமித்துக் கொள்ளுங்கள்.)

2. அதன் பின்னர் பேஸ்புக்கில் லாகின் செய்து டைம்லைன் புகைப்படமுள்ள இடத்திற்குச் சென்று Change Cover என்பதை அழுத்துங்கள்.

3. பின்னர் Upload Photo என்பதை அழுத்தி கணினியிலுள்ள புகைப்படத்தை தெரிவு செய்யுங்கள்.

4. அதன் பின்னர் Save Changes ஐ அழுத்தினால் டைம் லைன் புகைப்படம் மாற்றப்பட்டுவிடும்.

இப்பதிவை உங்கள் நண்பர்களுடன் பகிர்வு செய்வதன் மூலம் மனதைத் தொடும் வரிகளை அவர்களுக்கும் தெரியப்படுத்தி அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்.

மனமே வசப்படு : பேஸ்புக் டைம்லைன் புகைப்படங்கள்!

தமிழ் சினிமாவில் விஜய், அஜித், ரஜினி என்ற வரிசையில் பாக்ஸ் ஆபீஸ் வசூல் இருந்து வருகிறது. விஜயின் படங்கள் 225 கோடி முதல் 250 கோடியும் அஜித்தின் படங்கள் 175 கோடி முதல் 210 கோடி வரையும் வசூல் செய்து வந்த நிலையில் ரஜினிக்கு கடைசியாக வெற்றிப் படமாக அமைந்த ‘பேட்ட’ 165 கோடி வசூல் செய்தது.

"பியாற்சா கிரான்டே" எனும் பெருமுற்ற திறந்தவெளித் திரையரங்குச் சிறப்பு மிக்க லோகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் 73 வது பதிப்பு, கொரேனா வைரஸ் பெருந்தொற்று பாதுகாப்புக்களுக்கு அமைவாக, இணையவெளியில் ஆரம்பமாகியது.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

தமிழகத்தைச் சேர்ந்த பெருமைமிகு இளம் திறமைசாலிகள் பலரும் சர்வதேச அளவிலான கலை மற்றும் இசைத் தளங்களில் தடம் பதித்து மிகச் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருக்கின்றனர்.

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

ஒரு காலத்தில் அருண் பாண்டியன் கோலிவுட்டின் ஆர்நால்ட் எனப் போற்றப்பட்டவர். அந்த அளவுக்கு 12 பேக் உடம்பை உருவாக்கி பல அதிரடி ஆக்‌ஷன் படங்களில் நடித்தவர்.

சந்தானம்  நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது