தொழில்நுட்பம்

மொபைல் பாவனையாளர்கள் வேகமாக பிரபலமடைந்துவரும் ஆண்ட்ராய்ட் இயங்குதளம் பற்றி அறிந்திருப்பீர்கள்.

இவை பற்றி மேலும் ஆர்வமுள்ளவர்களுக்கும் அவற்றில் மென்பொருட்கள் உருவாக்குதல் போன்றவற்றிற்கான அடிப்படை தகவல்களை தமிழ் CPU எனும் அவரது வலைப்பதிவில் தொடராக வெளியிட்டு வருகின்றார் ந.ர.செ. ராஜ்குமார். அப்பதிவுகளை மீள் பிரசுரம் செய்வதற்கு அனுமதித்தமைக்கு நன்றி தெரிவிக்கின்றோம்.

4தமிழ்மீடியா குழுமம்

ஆண்ட்ராய்ட் கத்துக்கப் போறீங்களா?

நாளுக்கு நாள் மொபைல் சாதனங்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே வருகிறது. வங்கிக் கணக்கை கையாள்வது முதல் திரைப்பட முன்பதிவு வரை விரல்நுனியில் நம் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறோம். முப்பதாயிரத்தில் இருந்துதான் தொடக்க விலையே என்ற நிலை போய் மூவாயிரத்திற்குக் கூட ஸ்மார்ட் போன்கள் கிடைக்கின்றது.  இலவச மொபைல் இயக்கச் சூழலான ஆண்ட்ராய்ட் வந்தபிறகு அதிநவீன வசதிகள் கொண்ட மொபைல் சாதனங்கள் சாமானியர்களும் அணுகும்படியாக உள்ளது.

ஒரு துறை வளரும்போது அந்தத் துறையில் பணியாற்ற அதிக ஆட்கள் தேவைப்படுவது இயற்கை நியதி.

மொபைல் மென்பொருட்களை உருவாக்கும் திறனுள்ள வல்லுனர்களின் தேவை மின்னல் வேகத்தில் எகிறிக் கொண்டே போகிறது.  

மொபைல் சாதனங்களுக்கு மென்பொருள் உருவாக்க முற்றிலும் மாறுப்பட்ட அணுகும் முறை தேவைப்படுகிறது.  டெஸ்க்டாப் கணினியில் இருப்பது போன்ற நினைவகமோ (memory), செயலியோ (processor) மொபைல் சாதனத்தில் இருக்காது.  நீண்ட நேரம் மின்கலத்தில் (battery) சக்தி இருக்க தேவைக்கு மிஞ்சி எந்த வளங்களையும் பயன்படுத்தாத வண்ணம் மொபைலுக்கான மென்பொருளை வடிவமைக்க வேண்டும். 

ஐபோன், ஆண்ட்ராய்ட், ஜாவா மொபைல் ஆகிய அனைத்திலும் மிகப்பெரிய தேவைகள் இருக்கின்றது.  இதில் ஆண்ட்ராய்ட் பணிச்சூழலுக்கு மென்பொருள் உருவாக்க எங்கிருந்து தொடங்க வேண்டுமென இப்பதிவில் காண்போம். ஆண்ட்ராய்ட் கற்றுக்கொள்ள ஆசைப்படுவர்களுக்கு எழும் சில கேள்விகள்:

என்னுடைய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை பயன்படுத்த முடியுமா?

ஆண்ட்ராய்ட் மென்பொருட்களை உருவாக்க லினக்ஸ், மேக் ஓஎஸ், விண்டோஸ் என எந்த இயக்கச் சூழலையும் பயன்படுத்தலாம்.

ஆண்ட்ராய்ட் மொபைல் அவசியம் இருக்க வேண்டுமா?

மொபைல் தேவையில்லை, எமுலேட்டர் மூலமாக உருவாக்கிக் கொள்ளலாம் (சில வகையான மென்பொருட்களைத் தவிர).

எந்தெந்த மென்பொருள் உருவாக்கக் கருவிகள் தேவைப்படும்? செலவு செய்ய வேண்டியிருக்குமா? (Development tools and its cost)

ஆண்ட்ராய்ட் எஸ்.டி.கே, ஜாவா உருவாக்க மென்பொருளான எக்லிப்ஸ் என இலவவச திறமூலத் தீர்வுகளையே (free & open source tools) பயன்படுத்திக் கொள்ளலாம்

என் கணினியில் உருவாக்கிய மென்பொருளை எளிதாக உண்மையான பொபைலில் நிறுவ முடியுமா?

தாராளமாக இயக்க முடியும்.  இது ஐபோன், ஐபேட் மென்பொருட்களில்தான் சாத்தியமில்லை.  ஐபோன் மென்பொருள் உருவாக்கத்தில் பயன்படுத்தப் படுவது சிமுலேட்டர், இங்கு நாம் பயன்படுத்துவது எமுலேட்டர்.  எமுலேட்டர் மென்பொருளில் உண்மையான மொபைலில் எந்த கட்டளைகள் இயங்குகிறதோ அவை அப்படியே இயக்கப் படுகிறது.

-தொடரும்

பதிவின் மூலம் - http://tamilcpu.blogspot.com/2012/01/blog-post.html

ஆண்ட்ராய்ட் கற்றுக்கொள்ளுங்கள் - 2

ஐபேட் 3 ஐ வெளியிடவுள்ளது ஆப்பிள் நிறுவனம்

பயனுள்ள விண்டோஸ் கணினி ஸ்கீரின் சேவர்ஸ் 5 - 1

இணையத்தில் உங்களை யார் தொடர்கின்றார்கள்? - தகவல் தரும் பயர்பாக்ஸ் Tracking extension

யூடியூப்பிற்கு தெரிந்த உங்களைப் பற்றிய தகவல்களையும் நீக்கிவிடுங்கள்.

ஆசிரியரால் தேர்வு செய்யப்பட்ட செய்திகள்

ஒருநாள் ஒருநிமிடம் : மார்ச் 8, 2012

தினபலன்கள் : மார்ச் 8

ஐபேட் 3 இன் மாயாஜாலம் - இவையும் சாத்தியம் - வீடியோ

அதியசங்கள் ஏழு பழயவை அல்ல புதியவை

ஆண்ட்ராய்ட் கற்றுக்கொள்ளுங்கள்.

இணையத்தை கலக்கும் ஜோசப் கோனி யார்? - வீடியோ

சிங்கத்துக்கு சோறுபோடும் சூர்யா!

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

தமிழ் சினிமாவில் உயரமான நடிகர்கள் பலர். அவர்களில் சத்தியராஜ், விஷால் ஆகிய இருவரையும்விட உயரமானவர் நெப்போலியன்.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

"உங்கள் கனவை எங்கள் ஜம்போவின் காதில் கிசுகிசுக்கவும், யாருக்கு தெரியும், அது நனவாகும்! " எனக் கட்டியம் கூறியவாறு, மாணவர்கள் மத்தியில் சிறுகதை எழுதும் ஆர்வத்தினை ஏற்படுத்த முனைகிறது ஆம்பல், சிறுகதைப்போட்டி.

உலகிலேயே மிக சிக்கலான மற்றும் மிகப் பெரும் எந்திரம் அல்லது கருவி ஜெனீவாவில் அமைந்துள்ள LHC எனப்படும் 27 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட நிலக்கீழ் துகள் முடுக்கி கருவி (Particle accelerator) ஆகும்.

சாருஹாசன் நடித்து கடந்த வருடம் வெளியாகி ஓரளவுக்கு வசூலும் செய்த படம் தாதா 87. இப்படத்திற்கு விஜய் ஸ்ரீ கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியிருந்தார்.

ஊரடங்கு நீடித்திருக்கும் நிலையில் யோசுவா ஆரோன் எனும் யூடியூப் இசைப் பிரபலம் சூப்பர் சிங்கர் பாடகர்களை ஒருகிணைத்து