தொழில்நுட்பம்

எதிர்காலத்தை பற்றி முன்கூட்டியே கணிப்பதில் எப்போதும் பலருக்கும் ஆர்வம் அதிகம். தினமும் புத்தம் புதிய அறிமுகங்களுடன் பெருமளவில் மாற்றம் கண்டு முன்னேறி வரும் தகவல் தொழில்நுட்பத்துறையும் அதற்கு விதிவிலக்கல்ல. இத்துறையில் அடுத்து வரும் மாற்றங்களென பெருமளவில் பேசப்படும் விடயங்கள்  எவை என்பது பற்றிய தொகுப்பே இப்பதிவு.

டெஸ்க்டாப் கணனிகளுக்குப் பதில் ஸ்மார்ட் போன்கள்

குறைந்தது மூன்று வருடங்களுக்குள் டெஸ்க்டாப் கணனிகளின் இடத்தை ஸ்மார்ட் போன்கள் ஆக்கிரமித்துக்கொள்ளும் என கணிப்பிடுகின்றார்கள் தொழில்நுட்பத்துறையைச் சேர்ந்த மார்க்கட்டிங்க் வல்லுஞர்கள்.

இதனாலேயே பிரபல நிறுவனங்கள் பலவும் ஸ்மார்ட் தொலைபேசிகளை உருவாக்குவதில் போட்டி போடுகின்றன.

உலகம் முழுவதும் உள்ள மொபைல் பாவனையாளர்களில்  43 % வீதமானோர் ஏற்கனவே ஸ்மார்ட் போன்களை பயன்படுத்த தொடங்கிவிட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதிகமாக வெப் பிரவுஸிங்க், கேம்ஸ் விளையாடுவது, வீடியோ பார்வையிட போன்றவற்றிற்காகவே கணனிகளுக்குப் பதிலாக ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்த போவதாக கணிக்கின்றார்கள்.

சில வருடங்களில் டெஸ்க்டாப் கணனியைப் பயன்படுத்தும் காரணத்திற்காகவே நீங்கள் ஏளனமாக பார்க்கப்படலாம்.

Augmented Reality

நீங்கள் அலுவலக பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்புகின்றீர்கள் என கற்பனை செய்துகொள்ளுங்கள். காரில் ஏறியதும் முகப்பு கண்ணாடியில் நாளை அலுவலகத்திற்கு வெளியே நடைபெறவுள்ள முக்கிய மீட்டிங்க் பற்றி விஷுவல் மூலம் உங்களுக்கு நினைவூட்டப்படுகின்றது.

அதன் பின்னர் செல்லும் வழியில் நாளை சந்திக்கவுள்ள ஹோட்டல் இருக்கின்றது.  நாளைக்கு பிஸினஸ் பற்றி பேசுவதற்கு வரவேண்டிய ஹோட்டல் இதுதான் என்ற தகவல்கள் உங்களுக்கு கிடைக்கின்றது.

இவை அனைத்தும் இன்னும் சில வருடங்களில் சாத்தியமாகவுள்ளது.

Augmented Reality என்பது இணையம் , ஏனைய மூலங்களில் பரவிக் கிடக்கின்ற தகவல்களை ஒன்றினைத்து நிதர்சன உலகிற்கு கொண்டுவருவதாகும்.இதற்கு சிறந்த விளக்கத்தை தருகின்றது. மைக்ரோசாப்ட் நிறுவனம் 2011 ஆம் ஆண்டில் வெளியிட்ட வீடியோ இணைப்பு.

தற்போது ஸ்மார்ட்போன்களிலுள்ள அப்பிளிகேஷன்கள் இவற்றைச் செய்கின்றன. அவை இன்னும் வளர்ச்சியடைந்து முழுவதுமாக பயனடையும் காலம் தூரத்தில் இல்லை என்றே கூறலாம்.

இந்த பிரிவிலும் முந்திக்கொண்ட கூகிள் நிறுவனம், கூகிள் கண்ணாடித் திட்டம் என்ற தயாரிப்பை அறிமுகம் செய்து போட்டியை ஆரம்பித்து வைத்துள்ளது. கூகிள் Project Class பற்றி மேலும் தெரிந்துகொள்வதற்கு இங்கே செல்லுங்கள்.

Fujitsu Lifebook 2013

எங்கு சென்றாலும் டிஜிட்டல் சாதனங்களினின்றி வாழவே முடியாது  என்போர் அவர்களுடன் லேப்டாப், கைத்தொலைபேசி, டேபெலட், டிஜிட்டல் கமெரா,  என அனைத்தையும் தனித்தனியாக எடுத்துச் செல்வார்கள்.எனினும் எல்லா நேரமும் இவ்வளவு பொருட்களை உடன் எடுத்துச் செல்வது சாத்தியமில்லை. வெவ்வேறு வகையான டிஜிட்டல் சாதனங்களைத் தொடர்ந்து பயன்படுத்துபவர்களுக்கென உருவாக்கப்பட்டதுதான் 2013 ஆம் ஆண்டில் சந்தைக்கு வரும் Fujitsu Lifebook.லைப்புக் வந்தபின்னர் ஒரு லேப்டாப்பிலேயே கைத்தொலைபேசி, டேபெலட், டிஜிட்டல் கமெரா போன்ற அனைத்தையும் செருகி வைத்துவிடலாம்.


மேகக் கணிமை - Cloud Computing

தொழில்நுட்ப உலகில் கடந்த சில வருடங்களாக பரபரப்பாக பேசப்படும் விடயமாக கிளவுட் கம்யூட்டிங்க் உருவாகியுள்ளது.

ஹாட்வேர் , சாப்ட்வேர் என்பவற்றிற்கு தனித்தனியாக செலவு செய்ய தேவையில்லை என்பதே கிளவுட் தொழில்நுட்பத்தின் வெற்றி எனலாம்.

கிளவுட் கம்யூட்டிங்க் தொடர்பில் விக்கிபீடியாவில் முழு விபரங்களை இந்த இணைப்பில் பெற்றுக்கொள்ளலாம்.

தற்போது இந்தியாவிலும் வேகமாக வளர்ந்துவருகின்றது கிளவுட் கம்யூட்டிங்க் தொழில்நுட்பம்.

இதற்கு உதாரணமாக இந்திய அரசின் இன்பார்மேஷன் டெக்னாலாஜி பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் நாடளாவிய ரீதியில் கிளவுட் நெட்வேர்க்கை உருவாக்கி அதில் சகல மாநிலங்களின் டேட்டா சென்டர்களை  இணைக்கவுள்ளதாகவும்,

இதன் மூலம் அரசு மற்றும் மக்களிடையே தகவல் பரிமாற்றத்தை இணையத்தின் மூலம் பகிரும் செயற்பாட்டை தீவிரப்படுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்
2011 ஆம் ஆண்டில் இந்திய மார்கெட்டில் $ 860 மில்லியன் டாலரிலிருந்து 912 மில்லியன் டாலர் வரை கிளவுட் தொழில்நுட்பம் வளர்ச்சிகண்டுள்ளதாக market advisory firm Zinnov Management Consulting  தெரிவித்துள்ளது.

இனி வரப்போகும் ஆண்டுகளில் இன்பார்மேஷன் டெக்னாலொஜிக்கென இந்தியா செலவழிக்கும் மொத்த தொகையில்  20 % வீதம் கிளவுட் தொழில்நுட்பத்திற்கு செலவு செய்ய நேரிடலாம் எனவும் இது அத்துறையில் அதிக வேலைவாய்ப்பை உருவாக்கும் என Zinnov Management Consulting  தெரிவிக்கின்றது.

தகவல் தொழில்நுட்பத்துறையில் இன்னும் பல நுட்பங்கள் வரவிருக்கின்ற போதும் மேலுள்ளவையே பெருமளவில் பேசப்படவிருக்கின்றன. இவற்றைவிடவும் இத்துறையில் நீங்கள் எதிர்பார்த்திருக்கும் அல்லது கணிக்கும் மாற்றங்கள் எவை என்பதை 4தமிழ்மீடியா வாசகர்களுடன் கருத்துக்கள் பகுதியில் பகிர்ந்துகொள்ளலாம். இவை தொடர்பான கருத்துக்கள் அல்லது சந்தேகங்கள் உங்களுக்கு ஏற்படுமாயின் அவற்றை This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம்.

4தமிழ்மீடியாவின் ஐந்தாவது ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட சிறப்பு பதிவுகள்

நடிகையர் திலகம் சாவித்திரி வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘மகாநடிகை’யை இயக்கியதன் மூலம் இந்திய அளவில் பிரபலமானர் 35 வயது இயக்குநர் நாக் அஷ்வின்.

"பியாற்சா கிரான்டே" எனும் பெருமுற்ற திறந்தவெளித் திரையரங்குச் சிறப்பு மிக்க லோகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் 73 வது பதிப்பு, கொரேனா வைரஸ் பெருந்தொற்று பாதுகாப்புக்களுக்கு அமைவாக, இணையவெளியில் ஆரம்பமாகியது.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

தமிழகத்தைச் சேர்ந்த பெருமைமிகு இளம் திறமைசாலிகள் பலரும் சர்வதேச அளவிலான கலை மற்றும் இசைத் தளங்களில் தடம் பதித்து மிகச் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருக்கின்றனர்.

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

ஒரு காலத்தில் அருண் பாண்டியன் கோலிவுட்டின் ஆர்நால்ட் எனப் போற்றப்பட்டவர். அந்த அளவுக்கு 12 பேக் உடம்பை உருவாக்கி பல அதிரடி ஆக்‌ஷன் படங்களில் நடித்தவர்.

சந்தானம்  நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது