தொழில்நுட்பம்

கடந்த வருடம் கூகுளின் குரல்வழி உள்ளீடு வசதி தமிழுக்கும் கொண்டு வரப்பட்டது.

குரல்வழி உள்ளிடும் வசதியை, ஆங்கிலம் உட்பட, பல மொழிகளில் கூகுள் ஏற்கனவே வழங்கி இருந்தது.  தற்போது தமிழோடு, இந்தியா, ஆப்பிரிக்கா நாடுகளில் பேசப்படும் 20 கூடுதல் மொழிகளிலும் இந்த வசதியைச் சேர்த்துள்ளது.  இந்தச் சேர்க்கையோடு, 100க்கும் மேற்பட்ட மொழிகளில் குரல்வழி உள்ளிடும் வசதி செயல்படுகின்றது.

செல்லினம் போன்ற தமிழ் எழுதும் மென்பொருட்களிலும் இந்த வசதியைத் சேர்த்துள்ளனர். உதாரணமாக செல்லினத்தைக் கொண்டே நீங்கள் கூகுளின் வசதியைப் பயன்படுத்திக் குரல்வழித் தமிழில் உள்ளிடலாம். இதற்கான கட்டமைப்பு ஏற்கனவே செல்லினத்தில் இருப்பதால், புதிய பதிகையினை நீங்கள் தரவிரக்கம் செய்யத் தேவை இல்லை.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழை உங்கள் குரல் வழி உள்ளிடும் மொழியாக அமைக்க வேண்டியது மட்டுமே.

இப்போது ஆன்ட்ராய்டில் பதிப்பு மட்டும் வழங்கியுள்ளார்கள்.  கூகுள் நிறுவனத்தின் செயலி என்பதால் Play Store ல் Gboard தேர்வு செய்து தரவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும். ஏற்கனவே நமது பயனர்கள் எல்லாம் செல்லினத்தை ஆங்கிலம் மற்றும் தமிழ் என தட்டச்சு செய்து பழக்கப்பட்டுவிட்டார்கள். இப்போது கூடுதலாக ஒரு விசைப்பலகையா? அதுவும் ஒவ்வொரு முறையும் மாறி மாறி பயன்படுத்துவதா? கூகுள் வழங்கும் புது வசதியினை இடற்பாடின்றி எப்படி பெறுவது? என்றெல்லாம் இனி பயனர்கள் தடுமாற்றம் கொள்ளத் தவையில்லை.

படிநிலைகள்

ஓரிரு நொடிப் பொழுதில் சில படி நிலைகளில் நாம் செல்லினத்தில் இருந்தே இவ்வசதியினை பெறலாம்.  ஏற்கனவே செல்லினம் விசைப் பலகையில் ஒலி வாங்கி (மைக்) போன்ற குறியீடு இருக்கும். அதனை அழுத்தினால் அது நேராக கூகுளின்  Voice To Text வசதி இருப்பதை நீங்கள் கண்டிருப்பீர்கள். அதனை சொடுக்கியதும்  இடப்புறமாக Settings Symbol ஐக் காணலாம். அதனை தேர்வு செய்யுங்கள்.ஏற்கனவே நமக்கு Default language  ஆக ஆங்கிலம் இருக்கும். இப்போது  அதனை விடுத்து தமிழ் மொழியினை தேர்வு செய்ய வேண்டும். இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா என உங்கள் இருப்பு மற்றும் பேச்சு வழக்குக்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ளுங்கள்.அவ்வளவுதான், எப்போது வேண்டுமானாலும் நாம் நேரடியாக ஒலி வாங்கி குறியீட்டினை அழுத்தி தமிழில் பேசினால் அதுவாகவே தமிழில் தட்டச்சாவதை காணலாம்.பல மொழிகளில் Voice over Typing  வந்து விட்ட நிலையில் நம் தாய்மொழித் தமிழில் இந்த வசதி வரவில்லையே என்ற ஏக்கம் உலகத் தமிழர்களிடத்தில் இருந்து கொண்டே இருந்தது. அந்த விருப்பம் இன்றளவில் நிறைவேறியது தமிழ் கூறும் நல்லுலகிற்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்துள்ளது.

ஒலி வழி தமிழ் உள்ளீடு முறையில் காற்புள்ளி, முற்றுப்புள்ளி, மேற்கோள் ஆகியன தட்டச்சு செய்வதற்கு மீண்டும் நாம் விசைப்பலகைக்கு மாற வேண்டியுள்ளது. இதெற்கென தனியே இனி விசைப்பலகை ஏதும் நிறுவத் தேவையில்லை.

இனி விரல் வழி உள்ளீடும் சரி குரல் வழி உள்ளீடும் சரி செல்லினத்திலேயே உங்களுக்கு கிடைக்கும்.

குறிப்பு - இந்த வசதி ஆன்ட்ராய்டின் 8ம் பதிப்பிலேயே சரியாக பயன்படுத்தமுடிந்தது.

தகவல் உதவி - செல்லினம்

செல்லினம் தரவிறக்கம்

கூகுள் ஜிபோர்ட் தரவிறக்கம்

விஜய்சேதுபாதியின் பெயர் சொல்லும் படங்களில் ஒன்றாக இருக்கும் என்று அவரது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் விவாதிக்கத் தொடங்கியிருக்கும் படம 'க/பெ ரணசிங்கம்'. விருமாண்டி இயக்கத்தில் கிராமியப் பொருளாதாரத்தை நசுக்கும் கார்ப்பரேட்டுகளை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்னர்.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

தமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.

இந்தியாவில், இன்று கொரானா, தொற்று நோயை விட முக்கிய தலைப்புச் செய்தியாக மாறியிருப்பது புலம் பெயர் தொழிலாளர்கள். நான்காவது ஊரடங்கு நடந்து கொண்டிருக்கும் தற்போது உத்திரபிரதேச மாநிலத்தில் உச்சக்கட்ட அரசியலாக மாற்றப்பட்டுள்ளது.

ஹாய் : அலுவலக நண்பரிடமிருந்து வாட்ஸ்அப்

எப்படி இருக்கீங்க? : மீண்டும்

இரண்டு சரி அடையாளங்கள் அவருக்கு தெரிந்திருக்கும் நீலமாக! 

...

அடுத்த நாள்

இவரிடமிருந்து : ஹாய்!

மீண்டும் : நல்லா இருக்கேன். நீங்க எப்படி?

 

சிறிது நேரத்திற்கு பின்

நலம் : நண்பரிடமிருந்து

ஏன் இன்னும் வேலைக்கு வரல்ல? : மீண்டும்

நீல நிற சரி அடையாளங்கள்

...


சிறிது நேர சிந்தனைக்குப்பின்

சாதாரண குறுந்தகவல்களுக்குள் ஏற்கனவே வந்திருந்த அலுவலக குறுந்தகவலை காண்கிறான்!

"மறு அறிவித்தல் வரும் வரை உங்கள் பணியை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளோம்"

...

அலுவலக நட்பின் வாட்ஸ்அப் குழு

அவர்களில் ஒருவர் :

ஹாய்

ஒரு வழியா இரண்டு மாசம் கழித்து உங்கள எல்லாம் பார்த்துட்டேன்.

அவர்களில் வேறு ஒருவர் : ஆமா ஒருத்தனத்தான் பார்க்க முடியல

ஆமா ஏன் இன்னும் அவன் வரல்ல..?

எப்ப வறீங்க? பாஸ் : அடுத்தடுத்து அவர்களிடமிருந்து

நீல நிற சரி அடையாளங்கள்

...


அலுவலக குறுந்தகவலை மறுபடியும் பார்க்கிறான்..

நீளமான கோட்டின் அடையாளம் இங்கே இவனது மனதில்..

.

யதார்த்தமாக சொல்லப்பட்ட இக்கற்பனை கதையின் படி இன்று பலரின் பணி நிலைமை இதுதான். இது யார் மனதையும் புண்படுத்துவதற்காக இல்லை. 

4தமிழ்மீடியாவிற்காக ஹரிணி

இதையும் பாருங்கள் :

தெருக்களில் அலையும் தேசத்தின் புதல்வர்கள் - தமிழகத்தின் தலைப்புச் செய்தி !

 

விஜய்சேதுபதி சமூகத்தின் மீது அதிக காதல் கொண்ட படைப்பாளி. அதனால் தான், அரசுகளைப் பற்றிக் கவலைப்படாமல் தனது படங்களில் சில வசனங்களைப் பேசினாலும் சிந்திக்கிறது மாதிரி பேசுகிறார். அதற்கு தற்போது எடுத்துக்காட்டாக வந்திருக்கிறது க/பெ.ரணசிங்கம் காணொளி முன்னோட்டம்.

தமிழர் கலைகளில் 'வில்லுப்பாட்டு' ஒரு முதுகலையாகும். போர்களங்களில் போராடிய வீரர்கள் மத்தியிலிருந்து, கதையும் பாடலுமாகப் பிறந்த கலைவடிவம் எனவும் சொல்கின்றார்கள். இதனைத் தமிழகத்தில் பன்னெடுங்காலமாகச் சொல்லி வந்த ஒரு பெண்ணின் வரலாற்றினை, வாழ்வினை, தமிழுக்குப் புதிய இசைவடிவமான ராப் பாடல் மூலம் சொல்கின்றாள் ஒரு பெண்.