தொழில்நுட்பம்

 

அண்மையில் பேஸ்புக் நிறுவனம் பாவனையாளர்களின் அனுமதியின்றி பல நிறுவனங்களுக்கு தனிப்பட்ட தகவல்களை வழங்கியதாக சர்ச்சை எழுந்தது. இது தவறுதான் எங்களுக்கு தெரியாமல் இன்னுமொரு அப்ஸின் மூலம் தகவல்கள் சென்றுவிட்டது இனிமேல் இவ்வாறு நடக்காமல் பார்த்துக்கொள்கிறோம் என தெரிவித்து  மன்னிப்பு கோரியது பேஸ்புக்.  பொதுவாக பேஸ்புக் பயன்படுத்துபவர்கள் ஏராளமான பேஸ்புக் Apps களுக்கு பேஸ்புக்கில் உங்கள் விபரங்களை பயன்படுத்துவதற்கென அனுமதி வழங்கியிருப்பீர்கள். இதில் சில இணையத்தளங்களை பேஸ்புக் யூசர் நேம் பாஸ்வேர்ட் கொண்டு லாகின் செய்தும் இருக்கலாம்.

பேஸ்புக்கில் பிரைவசி தொடர்பில் அக்கறை கொண்டவராயின் இவ்வாறு அனுமதி அளித்த அப்பிளிகேஷன்களை அறிந்து அவற்றில் தேவையற்ற மற்றும் பழைய அப்களை நீக்கிவிடுவது சிறந்ததாகும்.

இதைச் செயவதற்கென

1. பேஸ்புக்கில் லாகின் செய்தபின்னர் உங்கள் பெயருக்கு கீழே இருக்கும் drop-down  மெனுவில் "Privacy Settings."  ஐ தெரிவு செய்யுங்கள்.
    
2. அதில் Apps and Websites  சென்ற பின்னர் Edit Settings ஐ அழுத்துங்கள்
    
3. "Apps You Use," இல் கிளிக் செய்தபின்னர் "Edit Settings" அழுத்தினால் application settings செல்ல முடியும்.

4. அங்கே பட்டியலிடப்படும் application  களில் பழைய மற்றும் தேவையற்றதை X அடையாளத்தை கிளிக் செய்வதன் மூலம் நீக்கிவிடலாம்.
    
பேஸ்புக் பாதுகாப்பு நடவடிக்கையாக மேலுள்ள படிமுறையை செய்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் தேவையற்றவர்களுக்கு கிடைப்பதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும்.
    
application settings நேரடி இணைப்பு https://www.facebook.com/settings/?tab=applications

பேஸ்புக் தொடர்பான ஏனைய பதிவுகள் இங்கே - http://bit.ly/HyWZkq

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

தமிழக பாரதிய ஜனதா கட்சியில் கடந்த மாதம் சில தமிழ்சினிமா பிரபலங்கள் இணைந்தனர்.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

தமிழ்நாட்டில் சைவ, அசைவ உணவங்களில் இன்று அளவு சாப்பாட்டின் சாராசரி விலை 60 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்கிறது.

நிச்சயம் உள்ளது. ஆனால் இதனை இவ்வாறு ஒழுங்கு படுத்தலாம். எமது சூரியன் எமது பால்வெளி அண்டத்தின் மையத்தை அல்ல ஆனால் அதன் மொத்த நிறையின் ஈர்ப்பு மையத்தை (barycenter) சுற்றி வருகின்றது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனை நிறுத்திவிடலாமா என்று விஜய் தொலைக்காட்சியும் அந்நிகழ்ச்சியின் தயாரிப்பு நிறுவனமான என்.டி.மோலும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தொலைக்காட்சி வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன.

யூடியூப்பில் உலக பிரபலமாகி இருப்பது ராணி தாஜ் என்பவரின் பங்கார டோலக்கு வாசிக்கும் வீடியோதான்.