தொழில்நுட்பம்
Typography

அமெரிக்க சந்தையில் $129.00 டாலர் விலை நிர்ணயத்துடன் மோட்டோ இ ஸ்மார்ட் தொலைபேசி வெளிவந்த அதே தினத்தில் இந்தியாவிலும் வெளியிடப்பட்டு தற்போது விற்பனையில் சூடுபிடித்துள்ளது இத்தொலைபேசி.

இதற்கான காரணங்களாக இதன் விலை மற்றும் தரத்தை குறிப்பிடலாம். மோட்டோ இ பற்றி ஏனைய சில தகவல்களை இருபகுதிகளாக பார்வையிடலாம். பகுதி 2 இங்கே மோட்டோ இ ஆண்ட்ராய்டு மொபைலை வாங்கிடலாமா? பகுதி 2பொதுவாக Samsung , HTC, LG போன்றவை தரமான ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் தொலைபேசிகளை தயாரித்தாலும் அவை விலையில் நெருங்கமுடியாதவையாக இருக்கும். குறைந்தவிலை சீனா தயாரிப்பு தொலைபேசிகள் சந்தையில் கிடைத்தாலும் அவை தரம் மற்றும் வேகம் குறைந்தவை. இந்த தடைகளை உடைத்ததே  மோட்டோ இ யின் வெற்றி.

வடிவமைப்பு

இந்திய ரூபாயில் 7000 இற்கு கிடைக்கும் ஸ்மார்ட் தொலைபேசி ஒன்றின் சிறந்த வடிவமைப்பாக மோட்டோ இ கருதப்படுகின்றது.

கரிய நிற ரப்பர் கவரைக்கொண்டு உருவாக்கப்பட்ட மோட்டோ இ கையில் வைத்திருக்க இதமாகவும் பிரீமியம் தோற்றத்தை தருவதாகவும் அமைந்துள்ளது.

பின்பக்கம் உறுதியாக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் பேட்டரியை தனியாக பிரிக்க முடியாதபடி உள்ளது.

தொலைபேசியின் கீழ்ப்பகுதியில் மைக் மற்றும் ஸ்பீக்கர்கள் உள்ளன.சிறப்பம்சங்கள்

ஆண்ட்ராய்டின் இறுதிப்பதிப்பான ஆண்ட்ராய்டு கிட்கேட் 4.4.2 வில் இயங்குகின்றது. அதிக அனிமேஷன்கள் இல்லாதது வேகத்தை அதிகப்படுத்தியுள்ளது.

Moto Assist மற்றும் அலேட் போன்ற அப்ஸகள் உள்ளன. Qualcomm Snapdragon 200 dual-core மற்றும் SoC ஆன்போட் 1ஜிபி அளவுள்ள RAM. இதன் துல்லிய வேகத்திற்கு துணைநிக்கின்றன.

மீடியா

மோட்டோ இ 4 ஜிபி சேமிப்பளவுடன் கிடைக்கின்றது எனினும் 32 ஜிபி அல்லது 64 ஜிபி வரை எஸ் டி காட் இணைக்கப்படும் வசதியை கொண்டுள்ளது.  மோட்டோ இயில் Connectivity , கமெரா , பேட்டரி  மற்றும் விலை  தொடர்பான தகவல்களை மற்றுமொரு தொழில்நுட்ப பதிவில் பார்வையிடலாம். மோட்டோ இ ஆண்ட்ராய்டு மொபைலை வாங்கிடலாமா? பகுதி 2

படங்கள் மற்றும் பதிவு Firstpost Tech2 தளத்திலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்டவையாகும்.

சமூக வலை இணைப்புக்கள்

https://www.facebook.com/4tamilmediadotcom

https://twitter.com/4tamilmedia

https://plus.google.com/u/0/109675630752736151170/posts

சாம்சங் கேலக்ஸி நோட் 1 (GT-N7000) ஐ ஆண்ட்ராய்டு ஜெலி பீன் 4.1.2 இற்கு மேம்படுத்தல் - 1

சாம்சங் கேலக்ஸி நோட் 1 (GT-N7000) ஐ ஆண்ட்ராய்டு ஜெலி பீன் 4.1.2 இற்கு மேம்படுத்தல் - பகுதி 2

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்