தொழில்நுட்பம்
Typography

கனடா மற்றும் அமெரிக்காவில்  ஏற்பட்ட வரலாறு காணாத கடும் குளிர்,  மற்றும் உறைய வைக்கும் பனிக் காலநிலை இந்த வார இறுதி வரை தொடரும் என எதிர்வுகூறல் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக அமெரிக்கா மற்றும் கனடாவில் நிலவும் கடும் குளிரினால் இதுவரை 21 பேர் பலியாகியுள்ளதுடன், 11,000 விமானசேவைகள் இரத்து செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில் நயகரா நீர்வீழ்ச்சி முழுமையாக உறைந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் புகைப்படங்கள் எதுவும் புதியன அல்ல என Bussfeed இன் பதிவை ஆதரமாக வைத்து யாஹூ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.இப்பதிவில் முதலாவது புகைப்படம் மட்டுமே கடந்த 2014 ஜனவரி 8ம் திகதியன்று எடுக்கப்பட்டதாக அறியமுடிகின்றது. இணையத்தில் வெளிவருகின்ற ஏனைய புகைப்படங்கள் யாவும் 2007 இற்கு முற்பட்ட புகைப்படங்கள் என Bussfeed  கூறுகின்றது.நயகரா நீர்வீழ்ச்சியின் அழகை மேலிருந்து பார்வையிட இந்த வீடியோ இணைப்பு!

நயகரா தொடர்பான ஏனைய இணைப்புக்கள்

உத்தியோகபூர்வ லைவ் கமெரா இணைப்பு

கூகிள் ஸ்டீட் வியூ இணைப்பு

புதிய செய்திகளை பார்வையிட

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்