தொழில்நுட்பம்
Typography

 

நேற்று வியாழக்கிழமை கூகுள் நிறுவனம் தனது முகப்பில் இட்டிருக்கும் டூடுளில் சிறப்பித்திருப்பது உலகின் முதல் அனிமேஷன் திரைப்படத் தயாரிப்பாளரான ஜேர்மனியின் லொட்டே ரெயினிஜெர் என்பவரை ஆகும். இன்று உலகை ஆக்கிரமித்திருக்கும் திரைப்பட அனிமேஷன் நிறுவனமான பிக்சார் (Pixar) நிறுவனம் ஆரம்பிக்க சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்னரேயே அனிமேஷன் துறையை உலகுக்கு அறிமுகப் படுத்தியவர் இவர்.

 silhouette அனிமேஷன் என்ற காகித வடிவிலான அனிமேஷனை இவர் எவ்வாறு வடிவமைத்தார் என்பதை அப்படியே இன்றைய கூகுளின் டூடுள் வீடியோ காட்டுகின்றது. 1899 ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் திகதி ஜேர்மனியில் பிறந்த இவர் தனது ஆயுள் காலத்தில் தயாரித்த 40 இற்கும் அதிகமான அனிமேஷன் படைப்புக்களில் அனைத்துமே இவரது சொந்த தயாரிப்புக்கள் ஆகும். 1926 இல் வெளியான The Adventures of Prince Achmed என்ற இவரது அனிமேஷன் படம் மிகப் பிரசித்தமானது.

ரெயினிஜெர் தனது அனிமேஷன்களை முதலில் கருப்பு நிற கார்ட் போர்டில் வரைந்து கொள்வார். பின் அவற்றை 3D அனிமேஷன் உருவாகும் விதத்தில் தேவையான இடங்களில் கத்திரிக் கோலால் வெட்டிக் கொள்வார். பின்னர் அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக பக்கங்களைப் புரட்டும் போது அது அனிமேஷனாகத் தென்படும். இவர் தனது அனிமேஷன்களை இவ்வாறு தான் செய்திருப்பார் என கூகுள் டூடுள் லோகோவில் காண்பித்தவர் ஒலிவியா ஹுய்ன்ஹ் ஆவார்.

ரெயினிஜெர் 1981 ஆம் ஆண்டு தனது 82 ஆவது வயதில் இந்த உலகை நீத்தார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்