தொழில்நுட்பம்

வரும் 2016ம் ஆண்டில் மொபைல் ஹேக்கிங் இருக்கலாம் என்று மென்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வலைத் தளங்களில் சிலரது மென் பொருகள் பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டு, பின்னர் அவர்களிடம் பணம் பறிப்பது என்பது நடைமுறையில் உள்ளது. இதே போன்று வரும் ஆண்டில் மொபைல் போனில் உள்ள மென்பொருள் பாகங்கள் ஹேக் செய்யப்பட்டு, இதனால் உங்களுக்கு பணம் கேட்டு மிரட்டல்கள் விடுத்த பின்னர் பணம் பெற்றுக்கொண்டு அவைகள் விடுவிக்கபடலாம் என்று மென்பொருளாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் மென்பொருள் ஆய்வாளர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. அப்போது அங்கு இந்த ஆய்வாளர்கள் தெரிவித்த கருத்துதான் மேற்கண்ட விஷயங்கள்.நம்மில் பெரும்பலானவர்களுக்கு மொபைல் பேக்-அப் விஷயங்கள் தெரியாது என்பதால், இப்படிப்பட்ட சைபர் குற்றங்களுக்கு 2016ம் ஆண்டில் வாய்ப்புக்கள் மிக அதிகமாக உள்ளன என்றும் இந்த மென்பொருள் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அனைவருக்கும் வங்கித் தொடர்பான கணக்கு தகவல்கள் மற்றும் பிற முக்கியத் தகவல்களை மொபைல் போனில் சேமிப்பது என்பது வழக்கமாக உள்ளது என்பதை இவ்வேளையில் குறிபிட்ட வேண்டும்.