தொழில்நுட்பம்
Typography

ஆண்ட்ராய்ட் தொலைபேசிகள் பயன்படுத்துபவர்களுக்கு 2018 உற்சாகம் தரக்கூடிய வருடமாக இருக்கின்றது. இதற்கு காரணம் ஸ்மார்ட்போன் தயாரிப்பில் நிலவும் போட்டா போட்டி. 

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு குறைந்த விலையுடன் ஸ்மார்ட்போனை தெரிவு செய்தால், அது வேகமற்று அல்லது கமெரா துல்லியமற்ற நிலையில் பயன்படுத்த வேண்டி இருக்கும். ஆனால் 2017 இலிருந்து அந்நிலை மாறி ஓரளவு பட்ஜெட் ஸ்மார்ட் போன்களும் நல்ல வேகம் கமெரா துல்லியம் என அசத்துகின்றன.

அண்மையில் ஹூவாய் நிறுவனத்தின் P20 ப்ரோ என்ற ஸ்மார்ட் போன் வெளிவந்தது. இதிலுள்ள 40 மெஹாபிக்ஸலுடன் வடிவமைப்பட்ட கமெராவே இதுவரை உள்ள ஆண்ட்ராய்ட் தொலைபேசிகளில் ஏன் ஆப்பிள் போனின் கமெராவை விட சிறந்தது என வர்ணிக்கின்றன பிரபல தொழில்நுட்ப தளங்கள் மற்றும் பாவனையாளர்கள்.

இதற்கு என்ன காரணம் என்பதை இப்பதிவில் பார்வையிடலாம்.

40 மெஹாபிக்ஸல் பின்பக்க கமெரா மற்றும் 25 மெஹாபிக்ஸல் செல்பி கமெரா. ஸ்மார்ட் தொலைபேசி ஒன்றில் வெளிவந்த கமெராவிலேயே அதிகூடிய மெஹாபிக்ஸல் அளவை தந்து அசத்துகின்றது ஹூவாய் நிறுவனம்.

இப்போதெல்லாம் இரு கமெராக்கள் வருவது சாதாரணம் ஆனால் ஹூவாய் பி20 இல் மூன்று பின்பக்க கமெராக்காள் உள்ளன.

40 மெஹாபிக்ஸல் கலர் லென்ஸ்

20 மெஹாபிக்ஸல்  கறுப்பு வெள்ளை லென்ஸ்

8 மெஹாபிக்ஸல்  டெலிபோட்டோ லென்ஸ் கொண்டிருக்கின்றது.

தொடர்புடைய பதிவுகள்

ஹூவாய் P20 ப்ரோ ஸ்மார்ட்போன் சில தகவல்கள்

ஹுவாய் P20 மற்றும் P20 Pro அறிமுகம் வீடியோ

மேலும் ஸ்மார்ட் போன்கள் தொடர்பான செய்திகளுக்கு

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்