தொழில்நுட்பம்

ப்ரோகிராமிங் குறித்த அடிப்படையான விஷயங்களைக் கற்று தரும் வகையில் ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஃபோன்களுக்கான ஒரு இலவச கிராஸ்ஹோப்பர்  என்ற மொபைல் அப்ளிகேஷன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மொபைலில் பயன்படுத்துவதற்கு எந்தவித இடையூறுகளும் இன்றி மிக எளிய வடிவமைப்பை கொண்டிருப்பது இந்த செயலின் வெற்றியாகும்.

சவால்களைத் தீர்ப்பது மற்றும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதன் மூலம் ஜாவாஸ்கிரீப்ட்டின் ஆரம்ப நிலையை நீங்கள் விரைவில் கற்று கொள்ளலாம்.


இதில் கோடிங்கின் அடிப்படைகள், காலிங் செயல்பாடுகள், நிலையற்றவைகள் மற்றும் பொருட்களைப் பயன்படுத்துதல் என பல பாடத் தொகுப்புகள் இடம்பெற்றுள்ளன. சில நிமிடங்கள் செலவிட்டு, ஒரு சில சவால்களின் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக கற்று கொள்ள வைக்கிறது இந்த அப்ளிகேஷன்.

உங்களுக்கான சவால்களை செய்தபின்னர் அவற்றை நினைவில் வைத்திருக்க சிறிய கேள்வி பதில் பகுதியும் வருகின்றது.

சில சவால்களைப் வெற்றிப் பெறுவது மிக எளிதாகவும் உள்ளது.  சிறுவர்கள் கூட இந்த செயலி மூலம் இலகுவாக கணினி மொழி ஒன்றை கற்றுக்கொள்ளலாம்.

கணிணி மொழி ஒன்றை இதைவிட இலகுவாக கற்பதற்கு வேறு மாற்றீடு இருக்க முடியாது என்றே கூறலாம்.  500,000+ மேற்பட்டவர்களால் தரவிறக்கம் செய்யப்பட்டும் 10000 இற்கும் மேற்பட்ட ரிவியூக்களைப் பெற்றதுடன் அப்ஸ் ஸ்டோரின் கற்கும் பகுதியில் டாப் 10 பகுதியில் முன்னிலையிலும் இருக்கின்றது இந்த செயலி.

தரவிறக்கம் செய்வதற்கு https://play.google.com/store/apps/details?id=com.area120.grasshopper

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் " ஏலே" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.

வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.

கடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.

ஜூனியர் என்டிஆர், சிரஞ்சிவி மகன் ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள்

தமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.