தொழில்நுட்பம்
Typography

சீனாவில் ஆப்பிள் நிறுவனப் பெயர்களால் போலிகள் உலா வருகின்றன என்று ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை செய்துள்ளது.

ஆண்டிராய்டு செல்போன், tab என்று அனைத்திலும் முன்னணியில் இருக்கும் நிறுவனம் ஆப்பிள் நிறுவனம். சீனாவில் இந்நிறுவனத்துக்கு அதிகாரப்பூர்வமாக ஒரே ஒரு கிளைதான் உண்டு.ஆனால், சீனாவில் ஆப்பிள் நிறுவன லோகோவோடு, அந்நிறுனத்தில் வேலை செய்யும் ஆட்களுக்கான சீருடையுடன் சுமார் 30 கடைகள் பிரபல நகர் ஒன்றில் இயங்கி வருகிறதாம். அங்கு விற்கப்படும் பொருட்களும் ஆப்பிள் நிறுவன லோகோவோடு ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புக்கள் என்று கூறியே விற்கப்படுகிறதாம்.

ஆனால், ஆப்பிள் நிறுவனம் இப்போலி நிறுவனங்கள் குறித்து எதுவும் நடவடிக்கை எடுக்காமல், வாடிக்கையாளர்களுக்கு வெறும் எச்சரிக்கை மட்டும் செய்துள்ளது.ஆப்பிள் நிறுவனம் சீனாவின் புகழ்ப்பெற்ற நகரில் ஒரே ஒரு கடையை மட்டுமே போட்டுள்ளது என்றும், நுகர்வோர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கையை மட்டுமே ஆப்பிள் நிறுவனம் விடுத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்