தொழில்நுட்பம்
Typography

பொதுவாகவே வாட்ஸ் ஆப் தகவல்களை தொண்ணூறு நாட்களுக்கு சேமித்து வைக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தி அறிவித்துள்ளது.

வாட்ச் ஆப்பில் அனுப்பப்படும் தகவல்களை 90 நாட்களுக்கு அழிக்காமல் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு புதியக் கட்டுப்பாடுகளை அமல்படுத்த ஆலோசனை நடத்தி அறிவித்தும் இருந்தது.இதுக்குறித்துப் பொது மக்களும் மத்தியத் தகவல் மின்னணு தொடர்பு அமைச்சகத்துக்கு ஆலோசனைகள் வழங்கலாம் என்றும் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் திடீரென்று,சமூக வலைத் தளங்களுக்கு இந்தக் காட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன என்றும் மேலும், ரிசர்வ் வங்கிக்கும் பணப்பட்டுவாடா தொடர்பான இத்தகவல் பரிமாற்றத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது என்றும் அறிவித்துள்ளது.எனில், இந்தக் கட்டுப்பாடுகள் பொது மக்களுக்கா அல்லது வேறு பொது மக்கள் உட்பட வேறு யாருக்கேனுமா என்பதையும் மத்திய அரசு தெளிவுப் படுத்தவில்லை என்பதுக் குறிப்பிடத் தக்கது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்