தொழில்நுட்பம்
Typography

கூகிளின் ஹாண்ட் ரைட்டிங்க் ஆப்ஸ் சிறந்த வசதிகளை கொண்டிருக்கின்றது.  அதில் தமிழ் உட்பட 82 மொழிகளுக்கு Hand Writing Input கீ போர்ட் ஆதரவு தருகின்றது.

 

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் காகிதத்தில்  தமிழ் எழுதுவதைப்போல் தொலைபேசியின் இன்புட் பகுதியில் விரலினால் அல்லது ஸ்மார்ட் பேனாவில் எழுத எழுத அவை டிஜிட்டல் எழுத்துக்களாக பிழையின்றி மாற்றப்படுகின்றது.

உதாரணமாக இந்த கட்டுரை முழுமையாக இந்த அப்ஸை கொண்டு எழுதப்பட்டதாகும்.

முதலில் https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.handwriting.ime&hl=en என்ற இணைப்பிற்குச் சென்று ஆண்ட்ராய்ட் தொலைபேசியில்  நிறுவிவிடுங்கள் பின்னர் அங்கே கூறப்படும் படிமுறைகளைப் பின்பற்றி தமிழைத் தேர்வு செய்யவும் அவ்வளவுதான் இனிமேல் தமிழில் எழுதிட தடையில்லை.

அனைத்து ஆண்ட்ராய்ட் தொலைபேசிகளிலும் இது இயங்கினாலும் குறித்த சிலவற்றில் வேலை செய்யவில்லை. உதாரணமாக Huwei Ascend Mate7 போன்றவற்றில் கையால் எழுதக்கூடிய மொழிகளின் வரிசையில் தமிழ் இல்லை என காட்டுகின்றது.

வீடியோ உதவி

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்