தொழில்நுட்பம்
Typography

அண்மையில் கூகிள் போட்டோஸ் என்ற பெயருடன் பல புதிய வசதிகளை இணைத்து அறிமுகப்படுத்தியது கூகிள் நிறுவனம். அதில் ஆபிரிக்கர் ஒருவரின் புகைப்படங்கள், கொரில்லாஸ்

என்ற சொல்லுடன் தானாகவே Tag செய்யப்படுவதை  ஜூன் 28 இல் கணிணி வல்லுனர்  Jacky Alciné   கண்டுபிடித்து டுவிட்டரில் வெளியிட்டார்.

இதை உடனடியாக சரி செய்வதாகவும் இதற்கென மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்துள்ளது கூகிள் நிறுவனம்.

கூகிள் போட்டோஸ் சில தகவல்கள்

Google Photos அதிரடி மாற்றங்களைச் செயல்படுத்தி இருக்கிறது. கூகுள்+ வந்ததில் இருந்தே மற்ற சேவைகளுக்குச் சனி திசை ஆரம்பித்து விட்டது. கூகுள்+ சேவை ஃபேஸ்புக் போல மக்களிடையே பிரபலமாகவில்லை அதனால், கூகுள் வம்படியாகத் தனது மற்ற சேவைகளை இதில் புகுத்தி பயனாளர்களைக் கட்டாயமாகப் பயன்படுத்த வைத்தது.

ஆனால், பலரும் “நீ அதுக்குச் சரிப்பட்டு வர மாட்டே” என்று புறக்கணித்ததால், தற்போது வேறு வழியில்லாமல் Google Photos பகுதியை கூகுள் + ல் இருந்து பிரித்துத் தனியாகவும் பயன்படுத்தலாம் என்று அறிவித்து இருக்கிறது.

இதில் 16 megapixels வரையுள்ள நிழற் படங்களையும் 1080p தரமுள்ள 15 நிமிடக் காணொளிகளையும் இலவசமாகத் தரவேற்றம் (Upload) செய்யலாம்.

இதை எப்படிச் செய்வது?

https://photos.google.com/ தளத்தில் Settings என்று இருக்கும் அதில் High quality (free unlimited storage) என்ற வசதியை தேர்வு செய்ய வேண்டும்.

நீங்கள் கூகுள்+ ல் இருந்து நிழற்படங்களைத் தரவேற்றம் செய்தால் அதில் உள்ள settings சென்று Upload my photos at full size என்பதை Uncheck செய்ய வேண்டும்.

உங்கள் திறன்பேசியில் (Smartphone) செய்ய உங்கள் Google Photos செயலியில் (App) சென்று High quality (free unlimited storage) என்பதைத் தேர்வு செய்தால் போதும்.

இதில் நீங்கள் சேமிக்கும் அனைத்துப் படங்களும் 15 நிமிட காணொளிகளும் இலவசம்.

நான் இதைப் பயன்படுத்தி வருகிறேன். தாறுமாறாக இருக்கிறது :-) குறிப்பாக இதைத் திறன்பேசியில் பயன்படுத்த மிக வேகமாகவும் எளிதாகவும் உள்ளது.

தேதி, மாதம், வருடம் வாரியாக நமது நிழற்படங்களை எளிதாகத் தேட முடியும். சமீப கூகுள் மாற்றங்களில் மிகச் சிறந்த மாற்றம் என்றால் இதைத் தான் கூறுவேன்.

கிரி Blog இன் இணையத் தொழில்நுட்பச் செய்திகள் – ஜூன் 2015 என்ற பதிவிலிருந்து

BLOG COMMENTS POWERED BY DISQUS