தொழில்நுட்பம்

ஸ்மார்ட் தொலைபேசியொன்றை தெரிவு செய்து வாங்கிட பல வழிகள் உள்ளன. இது தொலைபேசியின் விலை தரம் போன்றவற்றினால் வேறுபடும். இணையத்தில் ஸ்மார்ட் தொலைபேசிகள் தொடர்பாக ஏராளமான தகவல்கள் உள்ளன. இவற்றை ஆய்வு செய்து தெரிவு செய்யும் தொலைபேசி தொடர்பான முடிவை எடுக்கலாம். ஆனால் எத்தளத்திற்குச் சென்று இதை உறுதி செய்வது. உத்தியோகபூர்வ இணையத்தளங்கள் இல்லையா என கேட்பவர்களுக்கு உதவுகின்றது ஆண்ட்ராய்டின் விச் போன் பக்கம். இது தொடர்பான விரிவான தகவல்களை தருகின்றார் சைபர் சிம்மன் அவரின் அனுமதியுடன் பதிவின் மீள் பிரசுரம் இங்கே. 4தமிழ்மீடியா குழுமம்

ஐபோன் பிரியர்களுக்கு எந்த போன் வாங்குவது என்ற பிரச்சனை இல்லை. ஆனால் ஆண்ட்ராய்டு போனை நாடுபவர்களுக்கு அப்படி இல்லை. ஆண்ட்ராய்டு போன்களில் நூற்றுக்கணக்கான மாதிரிகள் இருப்பதால் எந்த போனை வாங்குவது என தேர்வு செய்வது கொஞ்சம் குழப்பமானது தான். புதிய போனை வாங்கும் முன் பிராண்டை பார்க்க வேண்டும், விலையை கவனிக்க வேண்டும், போனின் அம்சங்களை தெரிந்து கொள்ள வேண்டும்… இப்படி பலவற்றை பரிசிலித்தாக வேண்டும். இவற்றோடு வடிவமைப்பு , ஸ்டைல் ஆகிய அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த குழப்பத்தை தெளிவாக்கும் வகையில் கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்ட் போன்களில் உங்கள் தேவைக்கு ஏற்ப எதை தேர்வு செய்யலாம் என வழிகாட்டுவதற்கான இணையதளத்தை அமைத்துள்ளது.
ஆண்ட்ராய்டு இணையதளத்தில் விச் போன் எனும் துணைத்தலைப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த இணையதளத்தில் ஆண்ட்ராய்டு பிரியர்கள் தங்கள் அடுத்த போனை தேர்வ் செய்யலாம்.
இந்த தளம் எப்படி செயல்படுகிறது?

இந்த தளத்தில் நுழைந்ததுமே , நீங்கள் வாங்க இருக்கும் ஆண்ட்ராய்டு போன் எந்த வகை பயன்பாட்டிற்கானது என்பதை குறிப்பிட வேண்டும். புகைப்படங்கள் எடுக்க, இசை கேட்க், சமூக ஊடகங்களை பயன்படுத்த, இணையத்தில் உலாவ என்று பலவகையான பயன்பாடுகளும் வரிசையாக கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் இருந்து ஒன்றை தேர்வு செய்து, அதில் உங்கள் தேவை என்ன என்பதை குறிப்பிட வேண்டும். இதே போல நீங்கள் அதிகம் விரும்பும் 3 பயன்பாடு தொடர்பான தேவைகளை தெரிவித்தால் இந்த தளம் எந்த ஆண்ட்ராய்டு போன் சரியாக இருக்கும் என பரிந்துரைக்கிறது.

இதன் பரிந்துரை எந்த அளவுக்கு துல்லியமானது எனத்தெரியவில்லை. அது ஒவ்வொருவர் தேவை மற்றும் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப மாறலாம்.

ஆனால் இந்த தளம் பயன்படுத்த சுவாரஸ்யமாக இருக்கிறது. நூற்றுக்கணக்கான ஆண்ட்ராய்டு போன்களின் சிறப்பம்சங்களை சுலபமாக தெரிந்து கொள்ள இந்த தளம் வழி செய்கிறது. அதே போல எந்த வகையான பயன்பாட்டிற்கு எந்த போன்கள் ஏற்றவை என்றும் தெரிந்து கொள்ளலாம்.

ஆண்ட்ராய்டு போன்களின் அம்சங்களை ஒப்பிட்டு பார்ப்பதற்காக ஒவ்வொரு இணையதளமாக அல்லாடிக்கொண்டிருக்காமல் ஒரே இணையதளத்தில் அவற்றை தெரிந்து கொள்ள இந்த தளம் உதவுகிறது.
இதில் உள்ள செல்போன் சேவை நிறுவன சேவை தொடர்பான அம்சம் அமெரிக்கர்களுக்கானது என்றாலும் ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கான பொதுவாக பல அம்சங்களை இந்த தளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஆண்ட்ராய்டு போன் தொடர்பான ஆய்வுக்கு இதைவிட அருமையான தளம் இல்லை என்றும் சொல்லலாம்.

இணையதள முகவரி:
https://www.android.com/phones/whichphone/#/

"பொன்மகள் வந்தாள்" திரைப்படத்தின் இயக்குநர் ப்ரெட்ரிக் மன்னிப்பு கோரினார்.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

தமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.

ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரவுலிங், தனது இக்காபாக் (The Ickabog) எனும் ஒரு அரக்கனைப் பற்றிய விசித்திரக் கதையின் முதல் பாகத்தை ஆன்லைனில் இலவசமாக வெளியிட்டுள்ளார்.

21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 2003 ஆமாண்டு விண்ணுக்கு பூமியின் தாழ்வு ஒழுக்கில் வலம் வந்து கொண்டிருக்கும் ISS என்ற சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்று திரும்புகையில் எந்திரக் கோளாறால் கொலம்பியா என்ற விண் ஓடம் விபத்தில் சிக்கியது.

ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளமான ஜி 5 நிறுவனம் காட்மேன் என்ற வலை தொடரின் டீசர் முன்னோட்ட காட்சி வெளியாகி இருந்தது. அந்த முன்னோட்ட காட்சி யாவும் மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும் பிராமண சமூகத்தை இழிவு படுத்துவதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த வலைத்தொடர் மீது வழக்கறிஞர்கள் பலர் புகார் கொடுத்து வருகின்றனர்.

ஆண் பெண் அனைவரும் சமம் என்கிறோம். ஆனால் கார்ட்ஸ் விளையாட்டில் ஏன் ராஜாவை விட ராணி பெறுமதி குறைவானவளாக இருக்கிறாள் எனக் கேட்டு, நூற்றாண்டு காலமாக கார்ட்ஸ் விளையாட்டில் இருந்த இந்த ஆணாதிக்கத்தை புரட்டிப் போட்டிருக்கிறாள் பதின்ம வயது இஸ்ரேலிய பெண் மாயான்.