தொழில்நுட்பம்
Typography

இனிமேல் யூடியூப் வீடியோக்களை பார்வையிட இணைய இணைப்பபு தேவையில்லை. வீடியோக்களை ஆப்லைனிலும் பார்வையிடும் வசதியை ஏற்படுத்தியுள்ளதாக யூடியூப் அறிவித்துள்ளது. இதற்கென யூடியூப் அப்ஸை ஸ்மார்ட் தொலைபேசியில் நிறுவியிருக்க வேண்டும். அத்துடன் இணையத்திலிருக்கும் போது Offline இல் பார்வையிடுவதற்கென தரப்பட்டிருக்கும் யூடியூப் வீடியோ இணைப்புக்களில் கீழுள்ள பட்டனை அழுத்தவேண்டும்.

பின்னர் இணைப்பில்லாத தருணங்களில் அவற்றை பார்வையிட முடியும். இதுபற்றிய வீடியோ விளக்கம் இங்கே.

யூடியூப் அப்ஸில் ஆப்லைன் வசதி கடந்தவருடமே அறிமுகமாகியிருந்தபோதும் எல்லா வீடியோக்களையும் அவ்வாறு பார்வையிட முடியாதிருந்தது. உதாரணத்திற்கு காப்பிரைட் செய்யப்பட்ட பாடல்கள் போன்றவை ஆகும். மேலும் இந்தியாவிலிருக்கும் யூடியூப் பாவனையாளர்களுக்கு மட்டுமே இவ்வாறு ஆப்லைனில் பார்க்கும் வசதி உள்ளது. எனினும் விரைவில் யூடியூப் நிறுவனம் வீடியோக்களின் ஒலியை மட்டும் தரவிறக்கம் செய்து அவற்றை இணைய இணைப்பின்றி கேட்கக்கூடிய வசதியை அனைத்து யூடியூப் பாவனையாளர்களுக்கும் வழங்குவதற்கென முயற்சி செய்துவருவதாக பிரபல தொழில்நுட்ப இணையத்தளங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

யூடியூப் அப்ஸை ஆண்ட்ராய்டில் நிறுவிட இணைப்பு https://play.google.com/store/apps/details?id=com.google.android.youtube&hl=en

இவற்றையும் தவற விடாதீர்கள்

ரெட்மி நோட் 4ஜி வாங்கிய பின்னர் செய்ய வேண்டியவை - 1

ஆண்ட்ராய்ட் தொலைபேசியில் தொந்தரவு தரும் ஆப்ஸ் அப்டேட்ஸை நிறுத்தும் முறை - வீடியோ

BLOG COMMENTS POWERED BY DISQUS