தொழில்நுட்பம்
Typography

கூகிள் நிர்வாகியான டான் ஃப்ரெடின்புர்க் என்பவர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிக் கொண்டிருக்கும் போது சனிக்கிழமை நேபாளத்தைத் தாக்கிய பாரிய பூகம்பத்தில் சிக்கி பலியானதாக கூகுள் நிறுவனம் கவலையுடன் செய்தி வெளியிட்டுள்ளது.

இவர் கூகுளின் அண்மைய கண்டுபிடிப்பு செயற் திட்டங்களான ஓட்டுனர் இல்லாத கார் மற்றும் கூகுள் கிளாஸ் போன்றவற்றுக்கான கூகுள் X குழுவில் அங்கத்துவம் வகித்த இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருடன் பயணித்த எனைய கூகுள் ஊழியர்கள் மலையேற உதவும் சேர்ப்பாக்களின் உதவியுடன் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பனிச்சரிவின் போது உயிர் தப்பித்த போதும் தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் ஃப்ரெடின்புர்க் பலியானதாகத் தெரிய வருகின்றது. எவெரஸ்ட் சிகரத்தின் அண்மைய பகுதிகளையும் மலையேறுபவர்கள் தங்கும் இடங்களையும் கூகிள் ஸ்டீட் வியூ மூலம் பார்வையிடுவதற்கு உறுதுணையாக இருந்தவர் டான் ஃப்ரெடின்புர்க்.

மலையேறுவதிலும் ஆபத்துமிகுந்த பயணங்களை மேற்கொள்வதிலும் அதிக ஆர்வம் கொண்டவர் டான். Avalanche பேஸ் கேம்பில் வைத்து பனிசரிவினால் தாக்கப்பட்டு இறந்ததாக தெரியவருகின்றது. டானின் இன்ஸ்ட்ராகிராம் கணக்கில் அவருக்கான ஆதரவு பெருகிவருகின்றது. அத்துடன் டானின் பெயரால் நில நடுக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கென நிதி திரட்டலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டான் ஃப்ரெடின்புர்க் குழிவினரின் உதவியுடன் படம்பிக்கப்பட்ட எவெரெஸ்ட் கூகிள் ஸ்டீட்வியூ இணைப்புக்கள் இங்கே.எவெரெஸ்ட் பேஸ் கேம்ப் பற்றிய இணைப்புக்கள்

BLOG COMMENTS POWERED BY DISQUS