தொழில்நுட்பம்

2014 ஆகஸ்ட் மாதத்தில் வெளிவந்த ரெட்மி நோட் 4ஜி 13 மெஹாபிக்சல் கமெராவுடனும் 8 ஜிபி அளவு உள்ளக மெமரி 2ஜிபி ராம் ப்ராஸஸர் 1.6 GHz Cortex - A7 , Qualcomm MSM8928 Snabdragon 400 சிப், MIUI 5.0 இயங்குதளத்துடனும்

சந்தையில் கிடைக்கின்றது போன்ற தகவல்களை முன்னொரு பதிவில் பார்வையிட்டிருந்தோம்.

ரெட்மி நோட் 4ஜி இன் விலை Deals Prime தளத்தில் USD 190 டாலர்கள் என நிர்ணயமாகியுள்ளது. தபாற் செலவையும் சேர்த்து USD 230 டாலர்கள். இதற்கான வரி நீங்கள் ஆடர் செய்யும் நாட்டிற்கேற்ப வித்தியாசப்படலாம். உதாரணமாக சுவிற்சர்லாந்திலிருந்து ரெட்மி நோட் ஐ ஆடர் செய்து பெற வரியும் சேர்த்து USD 260 டாலர்களாகும்.

எனவே ரெட்மி நோட் 4ஜி ஐ இணைய விற்பனையில் பெறவேண்டுமாயின் இந்திய ரூபாயில்  ₹ 14303.80 (வரியில்லாமல்) செலவாகின்றது.


மேலும் இணையத்தில் வாங்கியதும் அதில் குறிப்பிட்டுள்ள நாட்களில் பொருட்கள் உங்கள் கைகளுக்கு கிடைக்காது குறைந்தது ஒரு மாதமளவு காத்திருக்க வேண்டி வரலாம். இணையத்தில் வாங்கும் போது ஏற்படும் காலதாமதம் மற்றும் வரிகள் இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டே செயற்பட வேண்டும்.

அண்மையில் ஜியோமி தொலைபேசிகள் ஒரே நாளில் 20 லட்சம் போன்கள் விற்று கின்னஸ் சாதனை படைத்துள்ளதாக தெரியவருகின்றதுஇம்முறையும் ஸ்மார்ட் தொலைபேசிகள் விற்பனை சாதனை படைத்துள்ளன ஆனால் அது ஆப்பிள் நிறுவன தயாரிப்பல்ல ஜியோமி என வியக்கின்றது தொழில்நுட்ப உலகம்.

ஒருபக்கம் இப்படியான தகவல்கள் நல்ல ஒரு மார்க்கெட்டிங்க் யுக்தி எனவும் தெரிவிக்கின்றனர்

ரெட்மி நோட் 4ஜி வாங்கிய பின்னர் செய்ய வேண்டியவை - 1