தொழில்நுட்பம்
Typography

சாம்சாங்கின் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட் தொலைபேசிகளை உடனடியாக சுவிட்ச் ஆப் செய்யுமாறும்

அவற்றை வாங்கவோ பயன்படுத்தவோ வேண்டாம் என சாம்சங்க் நிறுவனம் அறிவித்துள்ளது.

அப்படி வாங்கியிருப்பின் அவற்றை உடனடியாக சாம்சங் நிறுவனத்திடம் திருப்பி தருமாறும் அறிவித்துள்ளது அந்நிறுவனம்.

நோட் 7 தொலைபேசிகள் சார்ஜ் செய்யும்போது அதிகமாக வெப்பமடைந்து அவை வெடிப்பதுடன் சேதங்களை விழைவிப்பதாக உறுதிப்படுத்தியதை அடுத்தே  இந்த முடிவை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது சாம்சங்க்.

இச்செய்தி பற்றி விரிவான சில தகவல்கள் கீழே.

சாம்சங்க் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் வரிசை ஸ்மார்ட் தொலைபேசிகள் அதன் பாவனையாளர்களிடையே மிக பிரபலமானவை. முதலாவது நோட் வரிசையை Samsung Galaxy Note N7000  ஐ 2011 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகமாகியது. அதன் பிறகு தொடர்ச்சியாக நோட் 6 வரைவாடிக்கையாளர்களை கவர்ந்து வந்தது சாம்சங்க்.

பொதுவாக நோட் வரிசை தொலைபேசிகள் ஏனையவற்றை விடவும் சற்றே அதிக வசதிகளுடன் டிஜிட்டல் பேனாவும் இணைத்து வெளிவரும். சந்தேகமே இல்லாமல் நோட் வரிசை ஸ்மார்ட் போனின் முன்னோடியாக சாம்சங்க் இருந்துவந்தது. சாம்சங்கைப் போலவே ஏனைய நிறுவனங்களும் நோட் வரிசையை அறிமுகம் செய்ய ஆரம்பித்தன.

நோட் 7 ஐ கடந்த 2016 ஆகஸ்ட்டில் வெளியிட்டது சாம்சங்க். வெளிவந்ததும் அதன் விற்பனையும் ஏனைய நோட் வரிசை போன்றே சூடு பிடித்தது. லட்சக்கணக்கான  நோட் தொலைபேசிகள் விற்றுத்தீர்ந்தன.

ஆனால் கொரிய செய்தி நிறுவனமொன்று முதலாவது சாம்சங்க் நோட் 7 ஸ்மார்ட் தொலைபேசி வெடித்ததாகவும் இதனால் சேதங்கள் ஏற்பட்டதாகவும் இரு வாரங்களுக்கு முன்பு  செய்தி வெளியிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து ஏனைய பல வெடிப்பு சம்பவங்களுடன் கார் வெடிப்பு மற்றும் ஜீப்பில் சார்ஜ் செய்யும் போது ஏற்பட்ட வெடிப்பு போன்றவை பதிவாகியது.

FAA என்ற அமெரிக்க மத்திய விமான போக்குவரத்து அரச நிறுவனத்தின் நோட் 7 அபாயகரமானது அவற்றை விமானத்தில் பயன்படுத்த வேண்டாம் என்ற அறிவிப்பும் வெளியாகியது.

இதுவரை 35 இற்கும் மேற்பட்ட வெடிப்புச் சம்பங்கள் பதிவாகியதாக சாம்சங்க் அறிவித்தது. இதைத் தொடர்ந்து உடனடியாக செப்டம்பர் 1ம் திகதியன்று அமெரிக்காவில் நோட் 7 இன் விற்பனையை நிறுத்தியது சாம்சாங்க். செப்டம்பர் 2இல் நோட் 7 தொலைபேசிகளை பயன்படுத்த வேண்டாம் அவற்றை உடனடியாக ஆப் செய்து சர்வீஸ் சென்டரில் ஒப்படைக்குமாறும் அதற்கு பதிலாக வேறு தொலைபேசியை பெற்றுக்கொள்ளலாம் எனவும் முதலாவது அறிவிப்பை வெளியிட்டது.

தற்போது உலகளவில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அமெரிக்க மத்திய விமான போக்குவரத்து நிறுவனத்தின் அறிவிப்பினால் நோட் 7 இன் விற்பனை பாதிப்படைந்தது. இதனால் சாம்சங்கிற்கு சுமார் 10 பில்லியன் அமெரிக்க டாலர் விற்பனையை இழக்கின்றது. மேலும் இந்திய விமானங்களில் எடுத்துச்செல்லவும் தடைசெய்யப்பட்டுள்ளதாக தெரிகின்றது.

விமான நிலைய பரிசோதனையின் போது உங்களிடம் நோட் 7 இருந்தால் அவற்றை ஆப் செய்து லக்கேஜில் வைக்க அறிவுறுத்தப்படுவதாக தெரிகின்றது.

ஏற்கனவே விற்றுத்தீர்ந்த 2.5 மில்லியன் நோட் 7 களை உடனடியாக மீளப்பெற்று அவற்றை மீளமைத்து வழங்கும் நடவடிக்கையை முடிக்கிவிட்டுள்ளது சாம்சங்க். அதுவரை பயனாளர்கள் கேலக்ஸி ஜே வரிசைகளை மாற்றீடாக பயன்படுத்தலாம் என தெரிகின்றது. அல்லது அமெரிக்க பாவனையாளர்கள் Galaxy S7 அல்லது Galaxy S7 Edge ஐ இலவசமாக பெற்று பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவை பற்றிய மேலதிக விபரங்கள் இங்கே - https://twitter.com/SamsungSupport

இச்செய்தி தொடர்பாக சாம்சங்க் நிறுவனத்தின் அறிக்கை மற்றும் கேள்வி பதில்கள் ஆங்கிலத்தில் (FAQ)

http://www.samsung.com/ch/news/product/samsung-galaxy-note7-stellungnahme#eng

புதிதாக அண்ட்ராய்ட் தொலைபேசியை வாங்கும் போது அதில் நீங்கள் பயன்படுத்தாத தேவையற்ற பல அப்ஸ்கள் நிறுவப்பட்டிருக்கும்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்