தொழில்நுட்பம்
Typography

2016, செப்டம்பர் மாத தொடக்கத்தில்,  ஐபோன் 7  மற்றும் ஐபோன் 7 ப்ளஸ் ஐ அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் வைத்து ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

ஐபோன் 7, 32 ஜிபி, 128 ஜிபி மற்றும் 256 ஜிபி கொள்ளளவில் கிடைக்கின்றது.  இதன் விலை அமெரிக்க டாலரில் $649 இருந்து $849 வரையாகும். இந்திய மதிப்பில் 43 ஆயிரத்திலிருந்து 56 ஆயிரம் ரூபா வாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஐபோன்  7, 4.7” அங்குல ரெட்டினா எச்டி டிஸ்ப்ளேயுடன் 3டி தொடுதிரை கொண்டது. இதன் தடிமன் 7.1 மி.மீ.  இதன் எடை 138 கிராம்.

4 ஜிபி ரேம் நினைவகத்துடன் , ஆப்பிளின் விஷேட A10 பியூசின்  சிப்கள் முதல் முறையாக பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 2.4GHz பிராசஸர் பொருத்தியுள்ளதால் அதிக ஆப்ஸ்களை ஒரே நேரத்தில் பயன்படுத்தல் மற்றும் அதிக நேரம் பேட்டரி சார்ஜ் நீடித்தல் போன்றவற்றை அதிக வசதிகளாக தரலாம் என எதிர்பார்க்கின்றனர்.

ஐபோன் 7 12 MP பின்பக்க கேமராவும் 7 MP HD முன்பக்க கேமராவும் கொண்டுள்ளது.  3ஜி நெட்ஒர்க்கில் 7எஸ் மாடலில் 14 மணிநேரம் இயங்கும் பேட்டரி உள்ளது 
ஐபோன் 7 மற்றும் 7 பிளஸ்-ல் முதல் முறையாக இரண்டு ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன.  ஹெட் போன் ஜாக் நீக்கி வயர்லெஸ் ஆடியோவை அறிமுகப்படுத்தியுள்ளது ஆப்பிள். அதற்காக ஆப்பிள் புதிதாக வயர்லெஸ் “ஏர்பாட்ஸ்” என்னும் ஹெட் போனையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

வாட்டர் ப்ரூப் மற்றும் டஸ்ட் ரெஸிஸ்டண்ட் போன்றவைகளுடன் வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் ஐபோன் 7 வெளியாகிய நாட்களுக்கு அண்மையிலேயே சாம்சங்க் இற்கு சோதனைக்காலம் ஆரம்பமானது.  சாம்சங்கின் கேலக்ஸி நோட் 7 தொலைபேசிகள் வெடிக்கத்தொடங்கியதுடன் அவற்றை உடனடியாக மீளப்பெறுவதாக அறிவித்தது சாம்சங்க்.

சாம்சங்க் கேலக்ஸி நோட்7 - ஐ பயன்படுத்த வேண்டாம் - சாம்சங்க் நிறுவனம் அறிவிப்பு

ஹேட்போன் ஜாக் ஐ முழுமையாக நீக்கிய ஆப்பிள் அதற்கு பதிலாக சார்ஜ் செய்யும் இடத்திலேயே பொருத்தக்கூடிய (lightning connector ) ஹெட்போன்களை தருகின்றது. எனினும் தனியாக Lightning to 3.5 mm Headphone Jack Adapter ஐயும் தருகின்றது. இதை தவறவிட்டால் 9 டாலர்களுக்கு வாங்க வேண்டும். எவ்வாறாயினும் சார்ஜ் செய்துகொண்டு இசையையும் கேட்க வேண்டுமென்றால் அதற்காக மேலும் 49 டாலர்கள் செலவு செய்து  iPhone Lightning Dock ஐ வாங்க வேண்டும்.


ஐபோன் 7 வெளிவந்ததை அடுத்து ஐபோன் 6 மற்றும் 6 ப்ள்ஸின் விலைகளில் மாற்றத்தை கொண்டுவந்துள்ளது ஆப்பிள் நிறுவனம்.  இதன்படி இந்தியாவில் ரூபாய் 22000 வரை விலை குறைந்துள்ளதாக தெரியவருகின்றது.

ஐபோன் 7 முதல் பார்வை வீடியோ

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்