தொழில்நுட்பம்

கால ஓட்டத்தில் அனைத்தும் கணினி இணைய பயன்பாடுகளாக மெல்ல மெல்ல மாறிவருவதை துரிதகதி மாற்றமாக 'கொரோனா' அமைத்துகொடுத்துவிட்டது.

திரைக்கதை இயக்குனர் பழக்கடை வைத்தார் என்பது ஒரு கதை என்றால் திரை ஒளிப்பதிவாளர் ஓயாமல் இணையவழி உழைத்துக்கொண்டிருக்கிறார் என்பது மற்றுமொரு கதை.

இது இவ்வாறு இருக்க சமூகவலைத்தளங்களில் பேஸ்புக்கை அடுத்து இன்ஸ்டகிராம் முன்னிலை வகுத்துவருகிறது. நேர்த்தியான தோற்றம், இலகுவான பாவனையால் (வணிக) பயனாளர்களின் ஒரு நிழலாக இயங்கிவருகிறது.

இன்ஸ்டகிராம் பொதுவாக தனிநபர் பாவனையாளர்களை விட வணிகரீதியான பாவனையாளர்களை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதனால் கடும் போட்டியும் அங்கு நிலவத்தொடங்கியிருக்கிறது. அவ்வகையில் இனி வரும் ஆண்டுகளில் படைப்பாற்றல் திறனுடன் சில தந்திரங்களை கையாளும் பொழுதே வணிக ரீதியான செயற்பாடுகளில் நன்மை உயரும்.

இன்ஸ்டகிராம் வணிகம் மற்றும் தனிநபர் கணக்குகளின் நன்மைகள் மற்றும் தீமைகள் என்னன்னெ? இந்த இருவேறு கணக்குகளையும் எப்படி கையாளலாம் என்றும் ஆங்கில இணையதளம் ஒன்றில் வெளியான கட்டுரையின் தமிழாக்கமாகவும் சுருக்கமாகவும் தர விளையும் பதிவு இது.

முதலாவதாக வணிக கணக்கு மற்றும் தனிநபர் கணக்கு ஆகியவற்றின் நன்மைகள் மற்றும் தீமைகளை காண்போம்.

தனிநபர் கணக்கா அல்லது வணிக கணக்கா?

நீங்கள் வணிக நோக்கத்திற்காக இன்ஸ்டகிராம் பாவிக்கிறீர்கள் என்றால் வணிக கணக்கை தனிப்பட்டதாக (Privat account) வைத்திருக்க முடிந்தால், இது ஹேஸ்டேக் ஆராய்ச்சி மற்றும் உங்கள் இடுகைகளின் செயல்திறனை பகுப்பாய்வு செய்வதற்கு சிறந்தது என கூறப்படுகிறது.

உங்கள் வணிகப் பொருள் அல்லது அது குறித்த ஆவணத்தை ஒரு வணிகக் கணக்கில் இடுகையிட வேண்டும் என்றே இன்ஸ்டகிராம் விரும்பும். ஆனால் நீங்கள் அதனை தனிப்பட்ட கணக்காகவும் மாற்றிக்கொள்ளலாம்.

வணிகக் கணக்கை தனிப்பட்டதாக்க (Private) முடியுமா?

வணிகக் கணக்காக தொடங்கப்பட்ட கணக்கை தனிப்பட்டதாக்க முடியாது. ஆனால் தனிப்பட்ட கணக்கை ஒரு வணிகக் கணக்காக மாற்றும் பட்சத்தில் உங்களது அனைத்து பதிவுகளையும் பொதுவாக எல்லோராலும் பார்க்க முடியும்.

இன்ஸ்டாகிராமில் வளர விரும்புவோர், தனிநபர் கணக்கை வைத்திருப்பது மோசமான யோசனையாகும்.

ஏனனில் உங்களிடம் தனிநபர் கணக்கு இருந்தால், நீங்கள் பதிவிடும் இடுகைகள் 'ஆய்வு பக்கத்தில்' (explore page) தோன்றாது. அதேபோல் உங்கள் இடுகைகளுக்காக சேர்க்கும் ஹேஷ்டேக்குகள் கூட ஹேஷ்டேக் பக்கங்களில் தோன்றாது, இதனால் இன்ஸ்டகிராம் உபயோகிக்கும் மக்கள் உங்கள் கணக்கை பின்தொடராவிட்டால் (follow) உங்கள் உள்ளடக்கங்கள் எதையும் பார்க்க முடியாது.

உங்களை தெரிந்தவர்கள் தவிர பெரும்பாலான இன்ஸ்டகிராம் உபயோகிக்கும் மக்கள் வெறுமனே உங்கள் கணக்கை பின்பற்ற மாட்டார்கள்.

ஆனால் தனியார் கணக்குகளுக்கு மாறுவதன் மூலம் வெற்றியைப் பெற்ற சில பெரிய சேனல்கள் உள்ளன என தெரிவிக்கப்படுகிறபோதும்; இவை அவற்றின் உள்ளடக்கங்கள் திருடப்பட்டு பகிரப்படுவதன் மூலமும் மற்றும் அவற்றின் பதிவுகள் குறுந்செய்திகளின் மூலம் பலருடன் அடிக்கடி பகிரப்பட்டமையே காரணமாக கூறப்படுகிறது.

மேலும் ஒரு தனியார் கணக்கிலிருந்து இடுகையை உள்ளடக்கிய ஒரு நேரடி செய்தியை (DM) யாராவது பெற்றால், அந்த இடுகையைப் பார்க்க அவர்கள் அந்த கணக்கை பின்பற்ற (follow) வேண்டும். நீங்கள் அதிக பின்தொடர்பவர்களை பெற விரும்பினால் இது ஒருவகை தந்திரமே;

இருப்பினும், நீங்கள் 100,000 க்கும் குறைவான பின்தொடர்பவர்களைக் கொண்டிருந்தாலோ, நீங்கள் இன்ஸ்டகிராமில் மேலும் வளர விரும்பினாலோ, பொது கணக்கை வைத்திருப்பதே சிறந்த வழி எனப்படுகிறது.

இது இவ்வாறு இருக்க இன்ஸ்டாகிராமில் வணிகக் கணக்கை காட்டிலும் தனிநபர் கணக்குகள் மூலம் உச்சம் அடையலாம் என பலர் கூறுகிறார்கள். இது உண்மையா இல்லையா என்றும் இது குறித்த அழமான ஆய்வு ஒன்று என்ன தெரிவிக்கிறது என்றும் அடுத்த பகுதியில் தொடரலாம்.

-4தமிழ்மீடியாவிற்காக தமிழில்: ஜெகா

மூலம் : jacob-le.com

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் " ஏலே" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.

வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.

கடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.

ஜூனியர் என்டிஆர், சிரஞ்சிவி மகன் ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள்

தமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.