தொழில்நுட்பம்
Typography

அமெரிக்காவைச் சேர்ந்த ஹேக்கர்கள் 26 இந்திய வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களின் வங்கித்தகவல்களை திருடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 அமெரிக்காவைச் சேர்ந்த ஹேக்கர்கள் இந்தியாவின் 26 வங்கிகளில் கணக்கு

வைத்திருப்பவர்களின் வங்கி விவரங்களை போலி இணையப் பக்கம் மூலம்

திருடுவதாக தகவல் கிடைத்துள்ளது. ஹெச்.டி.எஃப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ.

ஐ.டி.பி.ஐ. உள்ளிட்ட 26 வங்கிகளின் கணக்குகளில் இருந்து தகவல்கள்

திருடப்படுவதாக தெரியவந்திருக்கிறது.

 

csecurepay[.]com என்ற போலியான இணைய முகவரியை மூலம் இந்தத் திருட்டு

நடக்கிறது. இந்த இணைய முகவரியை கவனிக்காமல் வங்கிக்கணக்கு எண், மொபைல்

எண், மின்னஞ்சல் முகவரி, மற்றும் ஓ.டி.பி. எனப்படும் தற்காலிக பாஸ்வேட்

ஆகியவற்றை உள்ளீடாக (Input) அளிக்கும் போது ஒரு பிழைச்செய்தி (Error

Message) தோன்றும். இதன் மூலம் உள்ளீடு செய்த விவரங்கள் அனைத்தும்

ஹேக்கர்களால் திருடப்பட்டுவிட்டும்.

 

அமெரிக்காவைச் சேர்ந்த ஃபயர் ஐ என்ற இணையப் பாதுகாப்பு நிறுவனம் இந்த

தகவலை வெளியிட்டுள்ளது. மேலும், இந்தியாவின் மின்சாரம் மற்றும் தகவல்

தொழில்நுட்பத்துறை அமைச்சகத்துக்கு அந்த நிறுவனம் இதுகுறித்த எச்சரிக்கை

செய்தியை அனுப்பியுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்