தொழில்நுட்பம்
Typography

உலகின் மிகச்சிறந்த ஆன்லைன் மூலமான புத்தக விற்பனை மற்றும் பொதிகள் விற்பனைத் தளமான அமேசன் (Amazon.com) டிரோன் எனும் ஆளில்லா விமானம் மூலமான தனது முதலாவது பொதி விற்பனையை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. ஆர்டர் செய்யப் பட்டு சுமார் 13 நிமிடங்களுக்குள் இந்த டெலிவரி இடம்பெற்றுள்ளது.

டிசம்பர் 7 ஆம் திகதி கேம்ப்ரிட்ஜில் நிகழ்த்தப் பட்ட இந்த டெலிவரியை அமேசன் நிறுவன தலைவர் ஜெஃப் பெஷொஸ் உறுதிப் படுத்தியுள்ளார். பகல் பொழுதில் நன்கு சூரிய வெளிச்சம் திகழும் போது சுமார் 400 அடி உயரத்தில் பறந்து இந்த டெலிவரியை குறித்த டிரோன் விமானம் நிகழ்த்தியுள்ளது. இனிமேலும் மேற்கொள்ளவுள்ள டிரோன் மூலமான விற்பனைகள் அனைத்தும் சூரிய வெளிச்சம் நிலவும் பகல் பொழுதில் மாத்திரமே நிகழ்த்தப் படும் எனவும் மழை, குளிர் மற்றும் பலத்த காற்று வீசும் போது இந்த டிரோன் விற்பனை மேற்கொள்ளப் பட மாட்டாது எனவும் அமேசன் அறிவித்துள்ளது.

டிசம்பர் 7 ஆம் திகதி மேற்கொள்ளப் பட்ட முதலாவது விற்பனைப் பொருளாக ஃபைர் டிவி பாக்ஸ் மற்றும் பாப்கோர்ன் பேக் என்பன இருந்துள்ளன.  இந்த முயற்சியைத் தொடர்ச்சியாக மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ள அமேசன் இதற்கு வாடிக்கையாளர்கள் பரந்த போதுமான பூங்காவை வீட்டின் அருகே வைத்திருக்க வேண்டும் எனவும் 5.7 lbs நிறைக்குக் குறைவான பொருட்கள் மாத்திரமே முதற்கட்டமாக டிரோன்கள் மூலம் விற்கப் படும் எனவும் நிபந்தனைகள் விதித்துள்ளது.

இந்த டிரோன்களுக்கு அமேசன் அனுமதிப் பத்திரம் வைத்திருக்க வேண்டிய அவசியம் இப்போது இல்லை என்று அறிவிக்கப் பட்டுள்ள போதும் சிவில் ஏவியேசன் ஆதோரிட்டி இனது அனுமதியுடன் தான் அமேசனின் வர்த்தக முறையிலான டிரோன்கள் இயக்கப் பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்