தொழில்நுட்பம்
Typography

ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் தொலைபேசிகளை பயன்படுத்த தொடங்கும் போதே கட்டாயமாக கூகிள் கணக்கொன்றை திறந்து லாகின் செய்யவேண்டும்.

இதன் மூலம் கூகிள் தொடர்புடைய உங்களின் இணைய பயன்பாடு முழுவதும் பதிவு செய்யப்படுகின்றது.

உதாரணமாக இணையம் மற்றும் தேடல்,  பயன்படுத்தும் கருவியின் விபரம், ஒலி இசை பயன்பாடு, யூடியூப் பார்வை மற்றும் தேடல் , நீங்கள் எங்கிருந்தீர்கள் என்ற சகல விபரங்களும் பதிவு செய்யப்படுகின்றது.

இவற்றை நிறுத்துமாறு கூகிளிடம் நீங்கள் தெரிவிக்கலாம்.

எவ்வாறு செய்வது முதலில் ஸ்மார்ட் தொலைபேசியின் செட்டிங்க் பகுதியில் கூகிளை தெரிவு செய்யுங்கள் பின்னர் Personal info & privacy setting இல் Activity Controls ஐ தெரிவு செய்து மேற்கூறிய அனைத்தையும் நிறுத்திவிடலாம்.

இந்த வீடியோவைப் பாருங்கள்.

விளம்பரங்களைக் காட்டுவதற்கென உங்கள் தரவுகளைப் பயன்படுத்துவதாக  கூறுகின்றது கூகிள். ஆனால் அவற்றையும் நிறுத்திட முடியும்.

ஸ்மார்ட் தொலைபேசியின் செட்டிங்க் பகுதியில் கூகிளை தெரிவு செய்யுங்கள் பின்னர்
Personal info & privacy setting  இல் Ads Settings செல்ல வேண்டும்.  அதில் ads based on your interests ஐ off செய்துவிடவேண்டும்.

இவற்றை செய்திட இரு நிமிடங்கள் போதுமானது.

இதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தரவுகளை ஓரளவாவது பாதுகாத்திடலாம்.

இந்த வீடியோவைப் பார்வையிடுங்கள்.

பயனுள்ள மற்றுமொறு பதிவு

இரு நிமிடங்களில் கூகிளிடம் நீங்கள் இருக்கும் இடத்தின் விபரங்கள் தருவதை நிறுத்துவது எப்படி?

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்