யூடியூப் இணையதளத்தில் ஒரே ஒரு வீடியோ அப்லோட் செய்த தமிழக மாணவர் ஒருவர் ஆறு மாதங்களில் ரூ.6.5 லட்சம் சம்பாதித்துள்ளார்.
தமிழகத்தில் கோவை அருகில் உள்ள திருப்பூர் என்ற நகரைச் சேர்ந்த கோபிநாத் என்ற 26 வயது இளைஞர் தனது தந்தையின் சமையல் கலையை வீடியோ எடுத்து யூடியூபில் பதிவு செய்துள்ளார். அவரே வீடியோ எடுத்து அவரே எடிட் செய்த இந்த வீடியோ உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று கூகுள் ஆட்சென்ஸ் மூலம் லட்சக்கணக்கில் இந்த வாலிபருக்கு வருமானத்தைக் கொடுத்துள்ளது.