தொழில்நுட்பம்
Typography

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் ஏலியன்களின் (வேற்றுக்கிரக வாசிகளின்) நடமாட்டத்தை பொது மக்களுக்கு மறைக்கின்றதா என்ற கேள்விக்கு உறுதியான ஆதாரம் விண்ணிலுள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையமான ISS இன் நேரடி ஒளிபரப்பில் (Live feed) கிடைக்கப் பெற்றுள்ளதாக ஒரு சிலர் கருதுகின்றனர்.

அதாவது மிகுந்த ஒளியுடைய 6 மர்ம அடையாளம் காணப்படாத பறக்கும் பொருட்கள் (UFO) ISS இன் அருகில் தென்பட்டதாகவும் இந்த feed இனை இணையத் தளத்தில் பொது மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போது நாசா நேரடி ஒளிபரப்பை உடனே நிறுத்தி ISS சர்வதேச விண்வெளி ஆய்வு செய்மதியின் உட்பகுதியில் உள்ள வீடியோ CAM இற்கு மாற்றி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. குறித்த 6 மிகப் பிரகாசமான ஒளிரும் பொருட்கள் தென்பட்ட  வீடியோ 31 செக்கன்கள் நீடித்ததாகவும் ஆனால் உடன் தடைப் படுத்தப் பட்டதாகவும் கூறப்படுகின்றது. ஆனாலும் இந்த கிளிப் முதன் முதலாக YouTube பாவனையாளர் ஒருவரால் கண்காணிக்கப் பட்டுத் தகவல் காட்டுத் தீ போல் பரவியுள்ளது.

மேலும் குறிப்பிடப் பட்ட 6 அடையாளம் காணப் படாத ஒளி பொருட்களும் அளவில் மிகப் பெரியதாக இருந்ததாகவும் கூறப்படுகின்றது. நாசா கூறும் ஐஸ் கட்டி துணிக்கைகளை விட இவை பெரிதாகவும் காணப் பட்டுள்ளன. இணையத் தளத்தில் தொழிற்படும் ஏலியன் ஹண்டர்ஸ் அதாவது வேற்றுக் கிரக வாசிகளை அடையாளம் காணும் குழுக்கள் இந்த 6 ஒளி பொருட்களும் UFO தான் இல்லாவிட்டால் நாசா அதனை மறைக்க வேண்டிய காரணம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இந்நிலையில்  முன்னால் நாசா விஞ்ஞானியான ஜேம்ஸ் ஒபெர்க் என்பவர் இதற்கு விஞ்ஞான ரீதியான விளக்கம் அளித்துள்ளார்.

அதில் குறித்த ஒளி பொருட்கள் Space dandruff எனப்படும் அளவில் மிகப் பெரிய ஐஸ் கிறிஸ்டல்ஸ் ஆக இருக்கும் வாய்ப்பு உள்ளது என்றும் ஏனெனில் இவை சூரிய வெளிச்சத்தைப் பிரதிபலித்து மிகப் பிரகாசமாக ஒளிரக் கூடியவை என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனவரியிலும் இதே போன்று ISS இற்கு அண்மையில் ஒளி பொருட்கள் இனம் காணப் பட்டுள்ளன. இது குறித்து விளக்கம் அளித்த ஜோன் கிரட்டிக் என்பவர் மனிதனால் தயாரிக்கப் பட்ட எந்த ஒரு விமானமும் அந்தளவு உயரத்தில் பறக்க வாய்ப்பில்லை என்றும் இவை உறுதியாக UFO ஆகத் தான் இருக்கும் என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி, தகவல் : Mail Online

வீடியோ இணைப்பைக்  காண : http://www.dailymail.co.uk/sciencetech/article-4235930/UFOlogists-claim-alien-spaceships-flew-past-ISS.html

 

- 4தமிழ்மீடியாவுக்காக நவன்

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

புதிய சிறுவர் கதை சொல்லி தமிழில் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்