தொழில்நுட்பம்
Typography

ஃபேஸ்புக்கின் கிளை நிறுவனமாக விளங்கும் வாட்ஸ் அப் நிறுவனம் தற்பொழுது
புதிய வசதி ஒன்றை அதன் பயனாளிகளுக்கு அறிமுகம் செய்துள்ளது.

இதுவரை வாட்ஸ் அப்பின் ஸ்டேடஸ்ஸாக டெக்ஸ்டை மட்டுமே வைக்க முடிந்தது. இனி
வாட்ஸ் அப்பின் ஸ்டேட்டஸாக புகைப்படங்கள் , ஜுப் மற்றும் வீடியோக்களை
வைக்கும் வசதியை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியுள்ளது.அதுமட்டுமின்றி இந்த
ஸ்டேட்டஸ்கள் 24 மணி நேரத்தில் தானாக மறையுமாறு செய்யலாம் . ஸ்டேட்டஸை
குறிப்பிட்ட நபர்கள் மட்டும் பார்வையிடும் வகையில் அதனுடைய பிரைவசியில்
மாற்றிக்கொள்ளவும் வசதி உண்டு.

இந்த புதிய வசதி முதல்கட்டமாக ஜரோப்பாவில் அறிமுகம் செய்யும் வாட்ஸ் அப்,
இந்த வசதிக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து இந்தியா உள்பட அனைத்து
நாடுகளிலும் அறிமுகம் செய்யவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS