தொழில்நுட்பம்

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஆண்டே விற்பனை தொடங்கி விட்ட
இ-சிகரெட், இந்தியாவில் 2011-ல் அறிமுகமாகி உள்ளது.

புகைப்பது உடலுக்குக் கெடுதி. மரணத்தையும் வரவழைக்கும் எமன் தான்
சிகரெட். சங்கிலித் தொடராக சிகரெட்டைப் புகைப்பவர்கள், நம்மிடையே ஏராளமாக
இருக்கின்றார்கள். இவர்களுக்கு சிகரெட் புகைக்காமல், தமது பொழுதை ஒட்ட
முடியாது. அந்த அளவுக்கு புகைத்தலுக்கு அடிமையாகி விட்ட சிகரெட்
பிரியர்கள்.

இந்த நிலையில், 2003ம் ஆண்டு சிகரெட் புகைப்போர் உலகில் ஓர் அமைதியான
புரட்சி நடந்தேறியது. ஹொன் லீக் என்ற சீனநாட்டு மருந்தாளர், ஈ-சிகரெட்டை
அறிமுகப்படுத்தினார்.

அதாவது இலத்திரனியல் சிகரெட்டை, தொடராகச் சிகரெட் புகைப்போர் இதன்
அடிமைததனத்திலிருந்து மீள, அறிமுகம் செய்யப்பட்டது. 2004, 2005ம்
ஆண்டுகளில் இது சந்தைப்படுத்தப்பட்டது.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஆண்டே விற்பனை தொடங்கி விட்ட
இ-சிகரெட், இந்தியாவில் 2011-ல் அறிமுகமாகி உள்ளது. குர்கானை சேர்ந்த
இணைய தள நிறுவனமான விண்ட்பைட் டாட் இன் இதை சீனாவில் இருந்து இறக்குமதி
செய்து ‘ஜாய் 510’ என்ற பெயரில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

பவுண்டன் பேனா வடிவில் இருக்கும் அதில், அழுத்தி இங்க் நிரப்ப இருக்கும்
பகுதியும் உண்டு. பேனாவில் இங்க், இ-சிகரெட்டில் நிகோடின் திரவம். ஆம்.
இந்த நிகோடின்தான் சிகரெட் பிடிப்பவர்களை திருப்திபடுத்துகிறது. திரவத்தை
சூடாக்க பேட்டரி, முனையில் எல்இடி விளக்கு. ‘ஜாய் 510’ சிகரெட்டின் ஒரு
விசையை அழுத்தினால் பேட்டரி இயங்கி திரவம் சூடாகி புகை வரும். சிகரெட்
முனையில் தீ நாக்கு போலவே விளக்கு எரியும்.

பிறகு வாயில் வைத்து இழுத்து வட்ட வட்டமாக புகை விடலாம். அந்த புகையால்
யாருக்கும் பகையில்லை. இந்த இ-சிகரெட் சிலமுறை பயன்படுத்தி தூக்கி எறிவது
ரூ. 300, நீண்ட காலம் ரீசார்ஜ் செய்து பயன்படுத்துவது ரூ. 1,650 என 2
விலையில் கிடைக்கிறது.

சிகரெட் பழக்கத்தை விட முடியாதவர்கள் கேன்சரின் ஆபத்து இல்லாமல் இதற்கு
மாறலாம், என்றும் பரிந்துரை செய்யப்படுகிறது.இருப்பினும், இது உண்மையா
என்பதை மருத்துவ நிபுணர்களே கூற வேண்டும்.