தொழில்நுட்பம்
Typography

ஆன்லைன் சேமிப்பு தளமாக செயற்படும் ட்ராப்பாக்ஸில் இரு வருடங்களுக்கு உங்களுக்கு தேவையான படங்கள் மற்றும் வீடியோக்களைத் சேமித்து வைத்திருக்க உதவும் முகமாக 48 ஜிபி கொள்ளளவை இலவசமாக தருகின்றது.

இதைப் பெற்றுக்கொள்ள உங்கள் ஸ்மார்ட் தொலைபேசியில் ட்ராப்பாக்ஸின் அப்ஸை நிறுவ வேண்டும். பின்னர் ஏற்கனவே ட்ராப்பாக்ஸ் கணக்கை வைத்திருந்தால் அதைக்கொண்டு லாகின் செய்யுங்கள் அல்லது புதிய ட்ராப்பாக்ஸ் கணக்கை உருவாக்கியும் லாகின் செய்யலாம்.

அவ்வாறு செய்தவுடன் மின்னஞ்சலில் இலவச சேமிப்பகத்தை பெறுவது தொடர்பான அறிவித்தல்கள் உடனே கிடைக்கும். அதில் கிடைக்கும் இணைப்பை கிளிக் செய்து சென்றதும் இலவச ஸ்டோரேஜை பெறுவதற்கு சில படிமுறைகளை செய்யவேண்டும்.

அதில் ட்ராப்பாக்ஸ் டூலை கணினியில் நிறுவி சில கோப்புக்களை தரவேற்றுங்கள். அடுத்ததாக மற்றுமொரு கணிணியிலும் அவ்வாறு செய்ய வேண்டும். பின்னர் தரவேற்றிய கோப்பொன்றை பகிர வேண்டும். மேலும் நண்பர்களையும் ட்ராப்பாக்ஸில் இணையுமாறு மின்னஞ்சல் தகவல் அனுப்புங்கள்.  அத்தோடு மொபைல் டிவைஸ் ஒன்றில் ட்ராப்பாக்ஸை நிறுவுங்கள்.

இவற்றை செய்த பின்னர் இரு வருடங்கள் பயன்படுத்தக்கூடியவாறு 48 ஜிபி அளவுள்ள ஆன்லைன் ஸ்டோரேஜ் இலவசமாக உங்களுக்கு கிடைக்கும். இணைப்பு

https://www.dropbox.com/

மேலும் இவை போன்ற தகவல்களுக்கு இணைந்திருங்கள்

4தமிழ்மிடியாவின் பேஸ்புக் பக்கம்

http://www.facebook.com/4tamilmediadotcom

அறிவித்தல்கள் தொடர்பான பேஸ்புக் பக்கம்

http://www.facebook.com/4tamilmedia

சினிமா தகவல்களுக்கான பேஸ்புக் பக்கம்

http://www.facebook.com/WorldCinema

BLOG COMMENTS POWERED BY DISQUS