தொழில்நுட்பம்
Typography

பால்வெளி அண்டத்தில் ஏனைய நட்சத்திரங்களைச் சுற்றி வரும் கிரகங்களில் பூமிக்கு ஒப்பான சூப்பர் ஏர்த் கிரகங்கள் உள்ளனவா என்பதை ஆராய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தால் அனுப்பப் பட்ட செய்மதியே கெப்ளர் விண் தொலைக் கட்டி என்பதை முன்னைய கட்டுரையில் சொல்லி இருந்தோம்.

தற்போது விஞ்ஞானிகள் இந்த கெப்ளர் விண் தொலைக் காட்டியின் ஆயிரக் கணக்கான புகைப்படங்கள் மற்றும் தரவுகளை ஒப்பிட்டு நோக்குகையில் பிரபஞ்சத்தில் மனித இனம் தோன்ற முன்னரேயே மிக அறிவுக் கூர்மை உடைய ஏலியன்கள் வாழ்க்கை இருந்திருக்கலாம் எனக் கருத்துத் தெரிவித்துள்ளனர். கெப்ளர் தொலைக்காட்டியின் தரவுகளைக் கொண்டு பார்க்கும் போது பிரபஞ்சத்திலுள்ள அறிவுக் கூர்மை மிக்க உயிரினங்களின் வாழ்வாதாரங்களின் எண்ணிக்கை குறித்த பிரசித்தமான 1961 ஆம் ஆண்டு Drake சமன்பாட்டின் படி ஒப்பிடப் பட்டது. இதன் படி நாம் அதாவது மனிதர்கள் தான் பிரபஞ்சத்தின் முதல் மிகவும் கூர்ப்படைந்த உயிரி ஆக இல்லாமல் இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுப்பப் பட்டுள்ளது.

கெப்ளர் செய்மதியால் பெறப்பட்ட ஆய்வின் 55 வருடங்களுக்கு முந்தைய காலப் பகுதியே தேர்ந்தெடுக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது. மனித இனம் மட்டுமே பிரபஞ்சத்தில் உள்ள ஒரேயொரு புத்திக் கூர்மை மிக்க உயிரி என்பதற்கான வாய்ப்பு தற்போது பெருகக் காத்திருக்கக் கூடிய விருத்தியடைந்து வரும் உயிரிகளின் வாழ்க்கைக்கான வாய்ப்புடன் ஒப்பிடுகையில் 10 பில்லியன் டிரில்லியனுக்கு ஒன்று எனத் தெரிவிக்கப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி:தகவல் Mail Online

மேலதிக விபரங்களுக்கு

4தமிழ்மீடியாவுக்காக நவன்

BLOG COMMENTS POWERED BY DISQUS