தொழில்நுட்பம்

எமது பூமியை நூல் இழையில் விட்டுச் செல்லக் கூடிய குறும் கோள் (asteroid) ஒன்று எம்மீது மோதினால் நமது பூமியில் பாரிய உயிரிழப்புக்களும் சேதங்களும் ஏற்படலாம் எனச் செய்திகள் வெளியாகி உள்ளன.

எமது பூமியின் ஒழுக்கை (Orbit) 6 வருடங்களுக்கு ஒருமுறை குறுக்கிடும்  பென்னு (Bennu) என்ற இந்த குறும் கோள் 2135 ஆம் ஆண்டு சந்திரனுக்கும் பூமிக்கும் இடையே குறுக்கே வருகின்றதாம்.

இதன்போதும் 500 மீட்டர் விட்டமுடைய இந்த குறும் கோள் புவி ஈர்ப்பால் ஈர்க்கப் படா விட்டால் அடுத்த 40 வருடங்களில் இன்னும் சற்று அதிகமாக பென்னு நெருங்கி வரும் என விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இதேவேளை இந்த பென்னு குறும்கோளை திசை திருப்பும் சாத்தியம் மற்றும் விண்கற்கள் குறித்த கல்விக்காக நாசா 2018 ஆம் ஆண்டு OSRIS-REx என்ற விண்கலத்தை விண்ணில் சூரியனைச் சுற்றி வரும் பென்னு விண்கல்லில் சென்று இறங்கும் விதத்தில் செலுத்தவுள்ளது.

மேலும் பென்னுவில் இருந்து போதுமான மணல் மாதிரிகளைப் பெற்ற பின்னர் 2023 ஆம் ஆண்டு குறித்த விண்கலம் பூமிக்குத்  திரும்ப வரும் என்றும் கூறப்படுகின்றது. இத்திட்டம் வெற்றி பெற்றால் ஓர் விண்கல்லுக்குச் சென்று வெற்றிகரமாகத் திரும்பிய செய்மதியாக OSRIS-REx சாதனை படைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி பிற்பகல் 7:05 மணிக்கு பூமியில் இருந்து இச்செய்மதி புறப்படவுள்ளது.